அம்பத்தூரில் அதிகாலையில் பால் பாக்கெட் திருடிய நபரை பால் முகவர்கள் சிசிடிவி காட்சியினை கொண்டு பிடித்தனர்.
பொது
இடங்களில் நடந்து செல்பவர்களின் கவனத்தை திசை திருப்பி கைகளில் வைத்திருக்கும் மொபைல்
போனைத் தட்டிச் செல்வது, பெண்களிடம் செயினைப் பறித்துச் செல்வது, சமயங்களில் வண்டியையே
பூட்டை உடைத்து தூக்கிச் செல்வது என திருடர்கள் சில மாதங்களுக்கு முன் கைவரிசை காட்டி
வந்தனர்.
கொரோனா பொது முடக்கம் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்தது போல் திருடர்களின் இந்த
‘தொழிலையும்’ முடக்கிப் ப்போட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் முன்பு போல் கூட முடியாததால்
இதுபோன்ற குற்றச் செயல்கள் சற்று குறைந்திருந்தன. இதனால் திருடர்களின் கவனமும் திசை
மாறியுள்ளது.
அம்பத்தூர் காவல் நிலையம் அருகே சத்தியமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பால் ஏஜென்சியில்
இன்று விற்பனைக்காக கடைமுன் அடுக்கி வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட பால் டிரேக்களில்
இரண்டு மட்டும் மாயமானது.
இதனால் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இரண்டு
ட்ரேக்களை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளன.
இதனை வைத்து பால் ஏஜென்சியைச் சேர்ந்தவர்கள் திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில்
அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்தவர்களை பிடித்து
விசாரித்ததில் பால் பாக்கெட் திருடியது இவர்கள் தான் என தெரியவந்தது. பின்னர் இருவரையும்
அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக