Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

’பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2,000 நிவாரணம்’ - முதல்வர்





நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000 வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவி தொகை உட்பட பொது விநியோக திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, சமையல் எண்ணெய் போன்றவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெறாத உறுப்பினர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1000 வழங்கியதைப் போல், நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000 வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக