Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

கொரோனாவை குணப்படுத்த அஸ்வகந்தா பயனளிக்குமா? டெல்லி ஐஐடி ஆய்வு!

கொரோனாவை குணப்படுத்த அஸ்வகந்தா பயனளிக்குமா? டெல்லி ஐஐடி ஆய்வு!

கொரோனாவை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் ஆயுர்வேத மருந்தான அஸ்வகந்தா உதவக்கூடும் இது குறித்து மேலும் ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது தில்லி ஐஐடி.

 உலகம் முழுக்க 49 இலட்சம், இந்தியாவில் 1 இலட்சம் என்று பெருந்தொற்றாக பரவிவரும் கொரோனாவுக்கு முற்றுபுள்ளி வைக்க உலக நாடுகள் அனைத்துமே முயற்சி செய்துகொண்டு தான் இருக்கின்றன.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிந்து அதை பரிசோதனைக்கு உட்படுத்தி தயார் நிலையில் இருப்பதாக பல நாடுகள் கூறிவருவதும் அறிந்ததே. இவற்றில் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் இந்தியாவில் ஆயுர்வேத மருந்து வழியாக கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா பலனளிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்திருக்கிறது.

ஐஐடி தில்லி மற்றும் ஜப்பானில் உள்ள நவீன தொழில்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவனம் (AIST) இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இவை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுக்க அஸ்வகந்தா மற்றும் தேனீ தயாரிக்க கூடிய பிசின் ( புரோபோலிஸில்) கொரோனா இயற்கையான சேர்மங்களை கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளது.

அஸ்வகந்தா என்பது நமக்கு ஏற்கனவே குறிப்பாக ஆயுர்வேத மருந்து எடுத்துகொள்ளும் அனைவரும் அறிந்த மூலிகைதான். இதை அமுக்கிரான் கிழங்கு என்றும் அழைக்கிறோம். சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும் அஸ்வகந்தாவின் இலை வேர் இரண்டுமே மருத்துவத்தில் பயன்படுகிறது. நெல்லிக்காய், திரிபலா சூரணம் போன்று அஸ்வகந்தாவும் அனைவரும் எடுத்துகொள்ளலாம் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

அஸ்வகந்தாவின் பயன்கள்

மன அழுத்தம், மன சோர்வு, இல்லறம் மூன்றின் குறைபாடுகளையும் விடுபட வேகமாக உதவ இவை பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைகொண்டிருக்கிறது. இவை வீக்கத்தை குறைக்க உதவும் சிறந்த மூலிகை. நோயெதிர்ப்பு தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது.

அஸ்வகந்தா இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்கிறது ஆய்வு. மேலும் இவை இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகள் குறைக்க உதவக்கூடும்.

இவை இதயத்துக்கும் நன்மை செய்யும். தற்போது இவை கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.


மார்பகபுற்றுநோய், குடல் புற்றுநோய் மூளை மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவற்றை தடுக்கவும் அஸ்வகந்தா உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அஸ்வகந்தா சிறந்த மூலிகை என்றாலும் கர்ப்பிணிகள், சிறு குழந்தைகள் பயன்படுத்தகூடாது. நோயாளிகள் இதை எடுத்து கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்வதும் அவசியம்.

தேனி தயாரிப்பில் உதவக்கூடிய பிசின் (புரோபோலிஸ்) ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்தவை. அவை உடலில் ஏற்படும் சேதங்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

அஸ்வகந்தாவும் கொரோனாவும்

தில்லி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) உயிரி தொழில்ல்நுட்ப துறை தலைவர் டி.சுந்தர், அஸ்வகந்தா மற்றும் தேனி தயாரிப்பில் பயன்படுத்தக்கூடிய பிசின் இரண்டின் சேர்மானம் கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாகும் செயல் திறனை கொண்டிருக்கிறது.

இதனால் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உண்டாகும் செலவும் கால நேரமும் குறையும். இவை கொரோனாவுக்கு எதிர்ப்பு மருந்தாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவிடும் என்று தெரிவித்தார். மேலும் இந்த மருந்தை தயாரிக்க இன்னும் சில காலம் தேவைப்படும் அதே நேரம் இது தொடர்பாக ஆய்வக மற்றும் மருத்துவமனை ரீதியிலான மதிப்பீடுகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

கொரோனா தொற்றுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு மாற்றாக அஸ்வகந்தாவை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அஸ்வகந்தா, அதிமதுரம், அரிசி திப்பிலி மற்றும் பாலிஹெர்பல் மூலிகை ஆகிய நான்கு ஆயுர்வேதமருந்துகளையும் மருத்துவ ப்தற்போது ஆயுஷ் அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு, சுகாதாரத்துறை அமைச்சகம் போன்றவற்றில் இருக்கும் விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் எப்போதும் பக்கவிளைவில்லா பலன் தரக்கூடியவை. குறைந்த செலவில் நிறைந்த பலனை தரக்கூடியவை சற்று பொறுமையாக ஆனாலும் குணப்படுத்திவிடக்கூடிய அற்புத குணங்களை கொண்டிருப்பவை அந்த வகையில் கொரோனா என்னும் பெருந்தொற்றை தடுக்க ஆயுர்வேத மருத்துவம் கைகொடுக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக