Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா கடைசியாக தம்பி படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் கார்த்தி, சத்யராஜ் ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். அந்த படத்தினை தொடர்ந்து ஜோதிகா நடித்துள்ள படம் தான் பொன்மகள் வந்தாள் இந்த படம் மார்ச் மாத இறுதியில் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது, ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக புது தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகு அதை நேரடியாக OTT இணையத்தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை துவங்கியது. ஒரு நல்ல தொகைக்கு அமேசான் ப்ரைம் நிறுவனம் அதை வாங்கிய நிலையில், மே 29ம் தேதி நேரடி OTT ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

பொன்மகள் வந்தாள் நேரடி ஆன்லைன் ரிலீசுக்கு சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எச்சரிக்கையை மீறி OTTயில் ரிலீஸ் செய்தால், இனி ஜோதிகா, சூர்யா தரப்பு படங்கள் எதையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யமாட்டோம் என எச்சரித்தனர். இதையும் தாண்டி தான் இது அமேசானில் ரிலீஸ் ஆகிறது பொன்மகள் வந்தாள்.

இந்நிலையில் தற்போது மே 21ம் தேதி பொன்மகள் வந்தால் பட டிரெய்லர் வெளியிடப்போவதாக சூர்யா அறிவித்துள்ளார். இந்த படம் நீதித்துறை பற்றியது என்பதால் Delay in Justice is Injustice என சூர்யா தனது ட்விட்டில் கூறியுள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெ.ஜெ. பிரெட்ரிக் இயக்கியுள்ளார். ஜோதிகா அதில் வழக்கறிஞராக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

இன்னும் ரிலீசுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தான் தற்போது ப்ரோமோஷன் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள துவங்கியுளளனர். மே 21ம் தேதி ட்ரெய்லர் வெளிவந்தால் அது படத்தை பெரிய அளவில் பிரபலப்படுத்தும் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

ஜோதிகா இந்த படத்தில் தான் முதல்முறையாக வழக்கறிஞராக நடித்துள்ளார். நீதிக்காக போராடும் நேர்மையாக ஒரு வக்கீலாக அவர் நடித்துள்ளார். இந்த படத்தினை பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா லாக்டவுனில் பழைய படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வீட்டிலேயே பார்த்து சலிப்படைந்து இருப்பவர்களுக்கு இது நிச்சயம் புத்துணர்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.


இப்படி பல பிரச்சனைகளை தாண்டி பொன்மகள் வந்தால் படத்தினை ரிலீஸ் செய்யும் நடிகர் சூர்யாவை பாராட்டி நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அவர் கூறியிருப்பதாவது..

"ஏழை மக்களின் வாழ்வை பாதிக்கும் கடையை திறக்கலாமா, வேண்டாமா, தடை போடலாமா வேண்டாமா என உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதி மன்றம் வரை படிப்படியாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நம் முடியை திருத்தலாமா வேண்டாமா என்கிற யோசனை வந்துவிட்டது. திருத்தங்கள் முடியில் மட்டுமில்லை, முடிவுகளில், சட்ட நிறுத்தங்களில், தொழில் சார்த்த வரையறை திருத்தங்கள் என பல தேவைப்படுகின்றன. மே 29ம் தேதி அமேசானில் ரிலீஸ் ஆகிறது பொன்மகள் வந்தாள்."

"தைரியம் தான் புருஷ லட்சணம் என சொல்வாங்க. ஒரு தைரிய லட்சுமியின் புருஷன், எத்தனை வைராக்கியத்தோடு அத்துணையின் காதல் கணவராக, கவுரவ காதலராக வைத்த காலை பின்வாங்காத வையக வீரராக OTT - ஒழுக்கம், தெளிவு, தைரியமுடன் பொன்மகள் வந்தாள் படத்தை அமேசானில் வெளியிடுகிறார். வாழ்த்துக்கள்" என கூறி இருந்தார் பார்த்திபன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக