Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 மே, 2020

`திருடுபோன பிஃஎப் பணம்; ரகசிய நம்பருக்காக சித்ரவதை!’ -செக்யூரிட்டிக்கு நேர்ந்த சோகம்

சென்னை தரமணி, கானகம் ரோடு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர் (29). இவர் தரமணி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் வசித்துவருகிறேன். எனது சொந்த மாநிலம் திரிபுரா. கந்தன்சாவடியில் உள்ள கம்பெனியில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவருகிறேன். எனக்கு கம்பெனி பிஃஎப் கணக்கு விவரங்கள் தெரியும். அதனால் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிஃஎப் கணக்கிலிருந்து எப்படி பணத்தை எடுப்பது என்பது குறித்த விவரங்களைச் சொல்லிக் கொடுப்பேன்.

அதன்பேரில் எனக்கு இஸ்மாயில் மியா என்பவர் அறிமுகமானார். அவருடைய கணக்கிலிருந்து 8,000 ரூபாய் எடுத்துக்கொண்டேன். அதனால் இஸ்மாயில் மியா, என் வீட்டிற்கு வந்து என்னைப் பற்றிக் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதாகக் கூறி மிரட்டினார். அதனால் நான் பயந்து தரமணியில் உள்ள இஸ்மாயில் மியா வீட்டுக்குச் சென்று 8,000 ரூபாய்க்குப் பதிலாக செல்போன் ஒன்றைக் கொடுத்தேன். அந்த செல்போனை மௌமியா என்பவரிடம் இஸ்மாயில் மியா கொடுத்துள்ளார்.

மௌமியா, அந்த செல்போனை தரமணியைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் கொடுத்துள்ளார். அந்த செல்போன் பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யப்பட்டிருந்ததால், என்னை லாக்கை எடுக்க வரும்படி மௌமியா கூறினார். அதன்படி அங்கு நான் சென்றேன். அந்த வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்ற என்னை 6 பேர் மடக்கிப்பிடித்தனர் பின்னர், என்னுடைய கையைப் பின்பக்கமாகக் கட்டினர். அப்போது மௌமியா, என் பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்தார்.

நான் உடனே சத்தம்போட்டேன். உடனே அங்கிருந்த கும்பல், என் வாயைத் துணியால் கட்டினர். பின்னர் அந்தக் கும்பல் என்னை அடித்து சித்ரவதை செய்தனர். அப்போது அந்தக் கும்பலிடம், `எனக்கு தாகமாக இருக்கிறது. தண்ணீர் வேண்டும்' என்று கேட்டேன். உடனே அவர்கள் தண்ணீர் கொடுத்தனர். தண்ணீர் குடிக்க என் கைகளை அவிழ்த்துவிட்டனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பி ஓடிவந்தேன். எனவே என்னைத் தாக்கிப் பணத்தைப் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக