நாம் தினமும் நமது வீடுகளில்
விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், நாம் சாதத்திலேயே பல
விதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மாங்காய்
-தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- புழுங்கலரிசி - 2 கப்
- சிறிய மாங்காய் - 1
- பெரிய வெங்காயம் - 4
- காய்ந்த மிளகாய் - 4
- சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- தக்காளி- 2
- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு, சிறிது கறிவேப்பிலை - தாளிக்க
- தண்ணீர், உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை கழுவி சாதத்தை
உதிரியாக வடித்து ஆற வைக்க வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு
போட்டு பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய்
போட்டு வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.
பின்னர் பத்து நிமிடம் கழித்து இறக்கி
ஆறியவுடன், சாதத்துடன் கலந்து பரிமாற வேண்டும்.இப்பொது சுவையான மாங்காய் தக்கலை
சாதம் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக