Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மே, 2020

கொரோனா-வை விட கொடிய தொற்றுநோய் வரும் நாட்களில் மனிதர்களை தாக்கலாம்...

கொரோனா-வை விட கொடிய தொற்றுநோய் வரும் நாட்களில் மனிதர்களை தாக்கலாம்...
கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து அடுத்து ஒரு அபாயகரமான தொற்று நோய் மனிதர்களை விரைவில் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்...

கொரோனா தொற்றுநோய் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, அது எப்போது முடிவடையும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனிடையே மற்றொரு தொற்றுநோய்க்கான அறிகுறி வெளியாகி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்சியாளர்கள் தெரிவிக்கையில்., இயற்கை கோபமாக உள்ளது, அது நம்முடைய அதிகப்படியான செயல்களைத் தண்டிக்க மனம் அமைத்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, அடுத்த தொற்றுநோய் எங்கிருந்து வரும் என குழப்பத்தில் இப்போது நாம் இருக்கிறோம். எனினும் அந்த பகுதி பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் பகுதியாக கூட இருக்காலம் என தெரிகிறது. அதாவது, வரும் நாட்களில், அமேசானின் மழைக்காடுகளில் இருந்து ஒரு தொற்றுநோய் ஏற்படலாம் என அறிகுறிகள் தெரிவிக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
 
இதற்கான பெரிய காரணம் இங்குள்ள காடுகளில் கண்மூடித்தனமாக மரங்களை வெட்டுவது. கண்மூடித்தனமாக காடுகளை அழிப்பது குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது வரும் நாட்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம், காணக்கூடிய காட்டு விலங்குகளின் வாழ்விடத்தைத் தாக்குவது மனிதர்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும்.  நகரமயமாக்கல் உயிரியல் நோய்களின் அபாயத்தை அதிகரித்துள்ளது, என்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

ஜூனோடிக் நோயில், விலங்குகள் நோய்வாய்ப்படவில்லை, ஆனால் மனிதர்களை நோய்வாய்ப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன.

ஜூனோடிக் நோய் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் என்று பொருள். கொரோனா வைரஸும் இந்த வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விஞ்ஞானிகள் இது மனிதர்களுக்கு வெளவால்களின் மூலம் பரவுவதாகவும் பின்னர் சீனாவின் வுஹானில் தொற்று ஒரு அபாயகரமான வடிவத்தை எடுத்ததாகவும் ஊகிக்கின்றனர். இந்நிலையில் வரும்காலத்தில் இயற்கையினை மனிதன் அழித்தால், கொரோனா போன்ற இன்னும் பிற கொடிய நோய்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக