>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 9 மே, 2020

    குழந்தைகள் வாயை திறந்து தூங்கினால் என்ன பிரச்சினையா இருக்கும்? அதை எப்படி சரிசெய்வது?

    மேம்போக்காக பார்த்தால் இது ஒரு சாதாரண விஷயமாக தோன்றும். ஆனால் குழந்தைகள் நல மருத்துவர்கள் அப்படி கூறுவதில்லை. குழந்தைகள் வாயைத் திறந்து தூங்குவது சில பிரச்சனைகளின் எதிரொலி. இதை பெற்றோர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தூங்கும் போது மூக்கு வழியாக சுவாசிக்காமல் வாய்வழியாக சுவாசிக்கிறார்கள். இது அவர்களின் மேல் சுவாச பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். இப்படி வாயைத் திறந்து தூங்குவதை நீங்கள் கண்டுக்காமல் விட்டால் அவர்கள் வளர்ந்த பிறகு சில சிக்கல்களை அனுபவிக்க கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    குழந்தைகள் வாயைத் திறந்து தூங்குவதற்கு என்ன அர்த்தம்?

    குழந்தைகள் எப்போதும் மூக்கின் வழியாகத் தான் சுவாசிக்கிறார்கள். ஆனால் 3-4 மாதமுடைய குழந்தைகள் தூங்கும் போது மூக்கிற்கு பதிலாக வாய்வழி சுவாசத்தை மேற்கொள்கிறார்கள். இப்படி அவர்கள் வாய்வழியாக சுவாசிக்க ஒரே காரணம் அவர்களின் நாசி பாதை தடைபட்டு இருப்பதே ஆகும்.

    இது உங்க குழந்தையின் மேல் சுவாசப் பாதையில் அடைப்பு இருப்பதை காட்டுகிறது. இது ஒரு சில ஒவ்வாமை தொற்றால் ஏற்படலாம். இதை அப்படியே விடும் போது இன்னும் சில சிக்கலான நிலைக்கு இழுத்துச் செல்ல வாய்ப்புள்ளது.

    வாய் வழியாக சுவாசிப்பது உங்க குழந்தைக்கு என்றும் பலனளிக்காது. ஏனெனில் வாய்வழியாக சுவாசிக்கும் போது உங்க உடலுக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டுமே கிடைக்கும். அதே மாதிரி உங்க மூக்கு தான் பாக்டீரியா மற்றும் காற்றில் இருக்கும் தூசி மாசுக்களை வடிகட்ட உதவும். இதுவே நீங்கள் வாய்வழியாக சுவாசித்தால் இந்த செயல்கள் எல்லாம் நடக்காது.

    குழந்தைகள் வாய்வழியாக சுவாசிக்க காரணங்கள்:

    சளி

    உங்க குழந்தையின் மூக்கு சளியால் தடைபட்டு போய் இருந்தால் அவர்கள் வாய்வழி சுவாசத்தை மேற்கொள்வார்கள். சளிப் பிரச்சினை காய்ச்சல் மற்றும் சில ஒவ்வாமை பிரச்சினைகளால் ஏற்படலாம். எனவே நீங்கள் முதலில் குழந்தையின் சளிக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.

    ஸ்லீப் அப்னியா

    இது ஸ்லீப் அப்னியாவின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். அவர்களின் மேல் காற்றுப்பாதை டான்சில்ஸ் மற்றும் அடினாய்டுகளால் தடைபட்டு இருக்கலாம். தூக்க மூச்சுத்திணறலின் பிற அறிகுறிகள் குறட்டை, அமைதியின்மை மற்றும் சுவாசிக்கும் போது இடைநிறுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

    பிறழ்வான சுவாசச்சுவர்

    உங்கள் குழந்தையின் நாசியைப் பிரிக்கும் குருத்தெலும்புகளில் உள்ள அசாதாரணத்தால் இது ஏற்படலாம். இதனால் மூக்கு வழியாக சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகலாம். இந்த பிரச்சினை பொதுவாக குறுகிய மேல்தாடை உள்ள குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.குழந்தைகளின் பழக்கவழக்கங்கள்

    சில நேரங்களில் குழந்தைகள் வாய்வழியாக சுவாசிக்கும் பழக்கத்தை கொண்டு இருக்கிறார்கள். நீடித்த நோய்க்கு பிறகு இந்த பிரச்சனையை அவர்கள் அனுபவிக்கலாம்.

    குழந்தைகளின் வாய்வழி சுவாசிப்பதை தடுக்க வீட்டு சிகிச்சைகள்:

    உங்க குழந்தை தூங்கும் போது வாய்வழி சுவாசத்தை மேற்கொண்டால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகுங்கள். அதன் மூலம் அவர்களின் சுவாசப் பாதையில் ஏற்பட்டுள்ள தடங்கலை அறிந்து கொள்ளலாம். வீட்டிலேயே இந்த பிரச்சினையை சமாளிக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

    ஈரப்பதமூட்டி

    உங்க அறையில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவது குழந்தைகளுக்கு மூக்கு அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். குழந்தைகளுக்கு ஒரு குளிர்-மூடுபனி ஈரப்பதமூட்டி பொருத்தமானது. நீராவி குளியலைக் கூட உங்க குழந்தைகளுக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

    பல்ப் சிரிஞ்ச்

    பல்ப் சிரிஞ்ச் கருவியை பயன்படுத்தி உங்க குழந்தையின் மூக்கில் இருந்து சளியை உறிஞ்சலாம். ஆனால் அதை செய்யும் போது அவர்களின் மூக்கை காயப்படுத்தாமல் மெதுவாக செய்ய வேண்டும்.

    உப்புநீர் சிகிச்சை

    உப்பு நீர் சிகிச்சை மேற்கொள்ளலாம். சில சாலைன் வாட்டர் மூலம் சளியை வெளியேற்றலாம். இது சளியை மெல்லியதாக்கி வெளியேற்றி விடும்.

    சிக்கல்கள்

    வாய் வழியாக சுவாசிப்பதால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன.

    * வீங்கிய டான்சில்ஸ்

    * வறட்டு இருமல்

    * வீங்கிய நாக்கு

    * கெட்ட துர்நாற்றம் கலந்த மூச்சு போன்றவை உண்டாகிறது.

    நீண்ட நாட்கள் அறிகுறிகளாக வாய் வழியாக சுவாசிக்கும் போது குழந்தையின் முக அம்சங்கள் நீட்டிக்கிறது. இதை அறுவை சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.

    மேலும் வாய் வழியாக சுவாசிக்கும் போது குறைந்த அளவு ஆக்ஸிஜன் மட்டும் கிடைப்பதால் காலப்போக்கில் குழந்தைக்கு இதய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் மூக்கால் சுவாசிக்கும் குழந்தைகளைப் போல நிம்மதியாக தூங்குவதில்லை. எனவே அவர்களின் ஆரோக்கியத்தில் ஒட்டுமொத்த விளைவுகள் ஏற்படுகிறது என்கிறார்கள் குழந்தைகள் நல மருத்துவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக