ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார்த்து எப்படி இருக்கு? சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது.
சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது.
சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! -னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? -னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்த படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது.
நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது.
நீதி :
நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கும் இருத்தல் வேண்டும்.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக