Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 12 மே, 2020

தரமான விவோ ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடலை மே 12 2020(இன்று ) அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, ஏற்கனவே இந்தோனேசிய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.




விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு
2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் உடன் அட்ரினோ 612ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வி19 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா,
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

விவோ வி19 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருiயாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில்
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி19 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது, மேலும் 33வாட் டூயல் எஞ்ஜின் பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் மற்றும் 197 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக