Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 12 மே, 2020

இன்று முதல் வெளிமாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதுவை அமைச்சர் அறிவிப்பு....




வெளிமாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் புதுச்சேரி வாசிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில்  கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டு 3 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை புதுச்சேரியில் 4364 பேருக்கு  பரிசோதனைகள் செய்யப்பட்டு 4273 பேருக்கு கொரொனா  தொற்று இல்லை என வந்துள்ளதாகவும் , மேலும், 74 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளை முதல் மீண்டும்  ரயில் போக்குவரத்து துவங்குவதால் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் பல மாநிலங்களில் உள்ளனர். அவர்கள் ஆயிரம் பேருக்கு மேல் புதுச்சேரிக்கு  வந்தால் மருத்துவமனை, மருத்துவர் என அதிக தேவை இருக்கும். இதனால் ஏற்கனவே ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்கள் வெளியே வர கூடாது. வெளிமாநிலத்தில் இருந்து வரும் புதுச்சேரி மக்களால் மீண்டும் நோய் பரவும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!