Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 12 மே, 2020

இணையத்தை மிரட்டும் அருண் விஜய்யின் டெக்ஸ்டர் தீம் வீடியோ!

MAFIA - Official Teaser | Arun Vijay, Prasanna, Priya Bhavani ...


துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திசை திருப்பியவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அதனை தொடர்ந்து அரவிந்த் சுவாமியை ஹீரோவாக வைத்து நரகாசுரன் படத்தை இயக்கினார். ஆனால் ஒரு சில காரணத்தால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

இதற்கிடையில் அருண் விஜய்யை வைத்து மாஃபியா படத்தை இயக்கினார். வில்லனாக நடிகர் பிரசன்னா நடித்திருந்த இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவனானி சங்கர் நடித்திருந்தார். மூவரும் துடிப்பான ஆக்ஷன் காட்சிகளில் வெறித்தனமாக போட்டிபோட்டு நடித்திருந்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வெற்றி நடைப்போட்டது.

எப்போதும் போலவே அருண்விஜய்யின் கதாபாத்திரம் தியேட்டரில் பலத்த கைதட்டல் வாங்கியது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றிருந்த "டெக்ஸ்டர்" எனும் அருண் விஜய்யின் தீம் பாடலை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக