ஸ்பேஸ்
எக்ஸ் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் மற்றும் கிரிம்ஸ் தம்பதியினருக்குச்
சமீபத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு எலான் மஸ்க் மற்றும் கிரிம்ஸ்
இருவரும் சேர்ந்து யோசித்து ஒரு அசாதாரணமான பெயரை அந்த குழந்தைக்குப் பெயர்
சூட்டியுள்ளனர். இந்த பெயரை எப்படி உச்சரிப்பது என்று பலருக்கும் தெரியாமல்
இருந்து வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் குழந்தையின் பெயரை இவர்கள்
மாற்றியுள்ளனர்.
புதிய மகனின் பெயர்
என்ன தெரியுமா?
புதிய
மகனின் பெயரை மீண்டும் இந்த தம்பதியினர் விசித்திரமான ஒரு பெயரைக் கொண்டு மாற்றம்
செய்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக
அதிகாரியான எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக
அறிவித்தார், அவரது மகனின் பெயர் "X Æ A-12 Musk" என்று அழைக்கப்படுவார்
என்று தனது இடுகையில் குறிப்பிட்டிருந்தார்.
பெயரில்
உள்ள பெரிய சிக்கலை உணர்ந்த மஸ்க்
இந்த பெயரை எப்படி உச்சரிப்பது என்று
பலருக்கும் புரியவில்லை, இந்த பெயரைப் பதிவு செய்யச் சென்ற பொழுது தான் எலான்
மாஸ்க்கிற்கு இதில் சிக்கல் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, மாநில
அரசியலமைப்பின் படி, ஆங்கில மொழியின் 26 அகரவரிசை எழுத்துக்களை மட்டுமே பெயர்கள்
பயன்படுத்த முடியும் என்பதால், தம்பதியினர் அவர்கள் சூட்டிய விசித்திரமான பெயரை
அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
மாற்றப்பட்ட புதிய பெயர் என்ன?
ஞாயிற்றுக்கிழமை, கிரிம்ஸ்
இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டார், ரசிகர்களிடமிருந்து
கமெண்ட்கள் குவிந்தது. டிவிட்டர் பயனர் ஒருவர் கிரிம்ஸ் இன் புகைப்படத்தின் கீழ்
"கலிஃபோர்னிய சட்டங்களால் குழந்தையின் பெயரை மாற்றினீர்களா? குழந்தையின்
புதிய பெயர் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு கிரிம்ஸ் தனது
மகனின் புதிய பெயர் "X Æ A-Xii" என்று தெரிவித்துள்ளார்.
X Æ A-Xii என்ற பெயருக்கான அர்த்தம் இதுதான்
X Æ A-Xii மாற்றத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தாமல், மகனின் பெயரிலிருந்த 12 என்ற எண்ணை ரோமன் எண்களாக மாற்றியுள்ளார் என்பதைத் தெரிவித்துள்ளார். கிரிம்ஸ் ஆர்வமுள்ள ரசிகர்களுக்காகப் பெயரின் பொருளை உடைத்தார். கனடிய இசைக்கலைஞர் - உண்மையான பெயர் கிளாரி எலிஸ் பௌச்சர் - "எக்ஸ்" என்பது "அறியப்படாத மாறி" என்பதைக் குறிக்கிறது என்று கூறியுள்ளார்.Æ என்றால் அதன் பொருள் காதலா?
இதற்கிடையில்,
"Æ" என்பது AI இன் எல்வென் எழுத்து வடிவமாகும், இது செயற்கை
நுண்ணறிவுக்கான சுருக்கெழுத்து மற்றும் ஜப்பானியர்கள் உட்படப் பல மொழிகளில் இந்த
எழுத்துக்கான பொருள் "காதல்" என்று அர்த்தமாகும். ""A-12 = S
-17 என்ற எங்களுக்குப் பிடித்த விமானமாகும், இதில் எந்த ஆயுதங்களும் இல்லை,
பாதுகாப்புகளும் இல்லை, ஆனால் இதன் வேகத்திற்கு ஈடு இல்லை. போரில் சிறந்தது, ஆனால்
வன்முறையற்றது" என்று அவர் மேலும் கூறினார்.
இப்படி
ஒரு விளக்கமா? குழம்பிப் போன நெட்டிசன்ஸ்
பெயரில்
உள்ள "A", "Archangel" என்பதையும் குறிக்கிறது, இது எனக்குப்
பிடித்த பாடல் என்று அவர் தெரிவித்தார். இந்த பெயரை எப்படி உச்சரிக்கப்
போகிறீர்கள் என்று எலான் மஸ்க் இடம் கேள்வி கேட்டபொழுது, அதன் பதில் மிகவும்
எளிமையானதாக இருந்துள்ளது.
முதலில் உச்சரிக்க
சிக்கல், இப்பொழுது புரிந்துகொள்வதில் சிக்கல்
அதாவது,
எக்ஸ் எழுத்தை எக்ஸ் என்று மட்டும் தான் உச்சரிக்க வேண்டும், பின்னர், Æ என்பது
'ஆஷ்' என்று உச்சரிக்கப்படுகிறது. பின்னர், ஏ -12, என்பது எனது பங்களிப்பு,"
என்று அவர் கூறியுள்ளார். முதலில் இந்த தம்பதியினர் வைத்த பெயரை உச்சரிப்பதில்
சிக்கல் கண்டா நெட்டிசன்ஸ்கள், தற்பொழுது இதன் விளக்கத்தை கேட்ட பின்பு இன்னும்
அதிகமான குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
X Æ A-Xii-யுடன்
மஸ்க்கிற்கு இன்னும் 5 குழந்தைகளா?
X
Æ A-Xii என்பது கிரிம்ஸ் மற்றும் எலான் மஸ்க் தம்பதியருக்குப் பிறந்த முதல்
குழந்தை ஆகும். மஸ்கிற்கு இந்த குழந்தையுடன் இன்னும் ஐந்து குழந்தைகள் உள்ளது.
அதில் இரட்டையர்கள் கிரிஃபின் மற்றும் சேவியர், மற்றும் ட்ரிப்லேட்ஸ் டாமியன்,
சாக்சன் மற்றும் க்கை (Kai) என்று மொத்தம் 5 குழந்தைகள் எலான் மஸ்க் இன் முந்தைய
திருமணத்திலிருந்து பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக