Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 15 மே, 2020

பொன்மகள் வந்தாள், பெண்குயின் படம் OTT இணையதளத்தில் மே, ஜூன் மாதம் ரிலீஸ்.

 நாடு முழுவதும் போடப்பட்ட கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணம் அணைத்து துறைகளும் முடங்கி உள்ளது. அதில் சினிமா துறையும் ஒன்றாகும். மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து படத்தின் ஷூட்டிங் மற்றும் பட பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடந்து முடிந்து பல படங்கள் ரீலீஸ் செய்யத் தயாராக உள்ளது. ஆனால் ஊரடங்கு காலத்தில் சமூக விலகல் முக்கியம் என்பதால், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

மேலும் கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால், அவர்கள் OTT இணையத்தளங்கள் என அழைக்கப்படும் Amazon, Netflix உட்பட பல தளத்தில் பார்த்து வருகின்றன. இதனால் படப்பிடிப்பு நடந்து முடிந்த படங்களை, OTT இணையதளங்களில் வெளியிடலாம் என எண்ணி  பல தயாரிப்பாளர்கள் OTT நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பல கட்ட பேச்சுவாரத்தைக்கு பிறகு, இந்த பிரச்சனைகளை தீர்த்து, ஒருவழியாக OTT இணையதளங்களில் படத்தை வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

 பொன்மகள் வந்தாள் படம் மே 29ம் தேதியும், பெண்குயின் படம் ஜூன் 19 ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக