Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

“Temporary ரேஷன் கார்ட் கொடுங்க” அபிஜித் பேனர்ஜி பளிச்!

கொரோனா வைரஸைத் தொடமால் இன்று எதையும் செய்ய முடியாது, சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி உடன் கொரோனா வைரஸ் பிரச்சனைகள் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைப் பற்றி வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலமாகப் பேசி இருக்கிறார்.

அதில் அபிஜித் பேனர்ஜி சொன்ன சில முக்கிய விஷயங்களைத் தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.

உதவித் திட்டங்கள்

நம்மில் பலரும் உதவித் திட்டங்கள் வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியா இன்னும், தனக்குப் போதுமான பெரிய உதவித் திட்டங்களை அறிவிக்க முடிவு செய்யவில்லை. இன்னும் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 1 % உதவித் திட்டங்களைப் பற்றித் தான் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

அமெரிக்கா

ஆனால் அமெரிக்கா, தன் ஒட்டு மொத்த பொருளாதார ஜி டி பி -ல் சுமார் 10 சதவிகிதத்தை உதவித் திட்டமாக அறிவித்து இருக்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறார் நோபல் பரிசு வென்ற இந்திய பொருளாதார வல்லுநர் அபிஜித் பேனர்ஜி. இந்தியாவும் அறிவித்தால் நன்றாக இருக்குமே..!

பாராட்டு

இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையின் போது, கடன் தவணைகளை ஒத்திப் போட்டு ஒரு நல்ல காரியத்தை, மத்திய அரசு செய்து இருக்கிறது என பாராட்டி இருக்கிறார். சுருக்கமாக கடனை ரத்து செய்வதை விட, கடனை தள்ளுபடி செய்வது நல்லது எனச் சொல்லி இருக்கிறார்.

எம் எஸ் எம் இ

செலவழிப்பது தான் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும். சிறு குறு தொழில் முனைவோர்கள் துறை மீண்டும் பழைய நிலைக்கு வரும், அதோடு எம் எஸ் எம் இ சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும். ஏழை மக்கள் கையில் பணம் கொடுக்கப் பட வேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் எனச் சொல்லி இருக்கிறார்.

டிமாண்ட் பிரச்சனை

கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு முன்பே, இந்தியாவில் ஏற்கனவே டிமாண்ட் பிரச்சனை இருந்தது. இப்போது நாம் இன்னும் பெரிய டிமாண்ட் பிரச்சனையை சந்திக்க இருக்கிறோம் எனச் சொல்லி எச்சரித்து இருக்கிறார் நோபல் பரிசு வென்ற இந்திய பொருளாதார மேதை அபிஜித் பேனர்ஜி.

தற்காலிக ரேஷன் கார்ட்

இதை எல்லாம் விட மிக முக்கியமாக, இந்தியாவில் உணவுப் பிரச்சனையை தீர்க்க, அரசு, 3 மாதங்களுக்கு தற்காலிக ரேஷன் அட்டைகளைக் கொடுக்க வேண்டும். வேண்டும். தேவை என்றால் அதன் காலத்தை இன்னொரு 3 மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் என ஒரு சூப்பர் ஐடியாவைக் கொடுத்து இருக்கிறார்.

என்ன சிறப்பு?

இந்த தற்காலிக ரேஷன் அட்டையை யாருக்கு வேண்டானாலும் கொடுங்கள். யார் கேட்டாலும் இந்த தற்காலிக ரேஷன் அட்டையைக் கொடுங்கள். சொல்லப் போனால் மற்ற ரேஷன் அட்டைகளை தற்காலிகமாக ரத்து செய்யுங்கள். இதை அடிப்படையாக வைத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொடுங்கள். நம்மிடம் நிறைய உணவு கையிருப்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக