>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 9 மே, 2020

    உலகம் முழுவதும் கொரோனா பரவ WUHAN-க்கு முக்கிய பங்கு: ஒப்புக் கொண்ட WHO

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனா எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அனைத்து நாடுகளையும் கொரோனா இருளில் ஆழ்த்தியதாகவும் சீனா மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. உலக சுகாதார அமைப்பும் (WHO) சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸை பரப்புவதில் சீனாவின் வுஹான் (Wuhan) சந்தையின் பங்கு இருப்பதாக WHO இப்போது தெரிவித்துள்ளது. மேலும் இந்த திசையில் ஆராய்ச்சி செய்ய வேண்டியதன் முக்கிய அவசியத்தை WHO தெரிவித்துள்ளது. 

    வுஹான் சந்தையின் பங்கு:

    WHO இன் உணவு பாதுகாப்பு ஜூனோடிக் வைரஸ் நிபுணர் டாக்டர் பீட்டர் பென் அம்பரெக் கூறுகையில், "உலக நாடுகளின் இந்த நிலைமைக்கு வுஹான் சந்தை ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இது தெளிவாக உள்ளது. ஆனால் எந்தளவுக்கு பங்கு கொண்டுள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. இந்த வைரஸ் வுஹான் சந்தையில் இருந்து வந்ததா அல்லது தற்செயலாக வைரஸ் உருவானதா எனக் கூறமுடியவில்லை. ஆனால் இந்த வைரஸ் சந்தையிலும் அதைச் சுற்றியும் காணப்பட்டன.  வைரஸ் பரவாமல் தடுக்க சீனா ஜனவரி மாதம் தான் வுஹான் சந்தையை மூடியது.

    இந்த கொரோனா வைரஸ் நேரடி விலங்குகளிடம் இருந்தோ அல்லது பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள் அல்லது அங்கு சாமான் வாங்க வந்தவர்கள் மூலம் இந்த வைரஸ் சந்தைக்குக் வந்ததா  என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று பீட்டர் கூறினார். சீனா மீதான அமெரிக்க குற்றச்சாட்டுகளுக்கு பீட்டர் பதிலளிக்கவில்லை. இந்த வைரஸ் சீனாவில் இருந்து உருவானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து கூறிவருகிறது என்பது குறிப்பிடதக்கது. மேலும் பீட்டர் கோருகையில், "மெர்ஸ் வைரஸ்" (Mers Virus) ஒட்டகங்களிலிருந்து பிறந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆனது. மெர்ஸ் வைரஸ் 2012 ல் சவுதி அரேபியாவில் தோன்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவியது. அதுபோல கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டுபிடிக்க சிலகாலம் ஆகும் என்றார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக