பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோவிட் -19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேசத்துடன் உரையாற்றினார். அவர் பேசிய உரையின் முக்கியமான ஹைலைட் "ஒரு சுய சார்புடைய இந்தியாவுக்கு ரூ.20 லட்சம் எகானாமிக் பேக்கேஜ்" தான் என்றாலும் கூட, அவர் Y2K என்கிற வார்த்தையும் குறிப்பிட்டார்.
Y2K பக் (bug) என்பது ஒரு கணினி குறைபாடு ஆகும். 1900 களின் பிற்பகுதியில் டிசம்பர் 31, 1999 க்கு பிறகு தேதிகளைக் கையாளும் போது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
1960 கள் முதல் 1980 கள் வரை கணினி நிரல்களை எழுதும் போது, கணினி பொறியாளர்கள் ஒரு ஆண்டின் கடைசி இரண்டு இலக்கங்களை மட்டுமே பயன்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, "1999":என்கிற ஆண்டில் இருந்து "19" எடுக்கப்பட்டு வெறும் "99" மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கணினிகளில்தரவைச் சேமிப்பது ஒரு விலையுயர்ந்த செயல்முறையாக இருந்ததால் இந்த முறை நடைமுறையில் இருந்தது.
புதிய நூற்றாண்டு நெருங்கும்போது, கணினிகளில் "2000" ஆம் ஆண்டை குறிப்பிட்ட "00 '' என்பதை பயன்படுத்த வேண்டி இருக்கும். இது அர்த்தமற்றது. இதை செய்தால் 2000 ஆம் ஆண்டுக்கு பதிலாக கணினியானது 1900 எனும் ஆண்டை எடுத்துக்கொள்ளும், அதாவது கணினிகள் 1 ஜனவரி 2000 க்கு பதிலாக ஜனவரி 1, 1900 ஐ விளக்கும் என்பதால் திட்டமிடப்பட்ட அனைத்து செயல்பாடுகளும் சேதமடையும் என்று புரோகிராமர்கள் கவலைப்படத் தொடங்கினர்.
'மில்லினியம் பக்' என்றும் அழைக்கப்படும் Y2K சிக்கல்' குறித்து கவலைப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனங்கள் ஒரு தீர்வைக் கொண்டு வர முடிவு செய்தன, அதற்காக Y2K compliant-விற்கு (ஒய் 2 கே-விற்கு இணக்கமான) ப்ரோகிராம்களை உருவாக்கினர்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகள் இந்த பக்-ஐ சரிசெய்ய, அதனுடன் போராட்ட பெருமளவில் முதலீடு செய்திருந்தன. ஆனால் இறுதியில் அப்படி எதுவுமே நடக்காததால் 'ஒய் 2 கே' பக் என்பது ஒரு புரளி தான் என்று நிராகரிக்கப்பட்டது.
இதை எதற்காக மோடி குறிப்பிட்டார் என்கிற சதியாலோசனை கோட்பாடுகளை உருவாக்கும் பொறுப்பை நாங்கள் உங்களிடமே விட்டு விடுகிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக