Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 23 ஜூன், 2020

10 பீர் குடித்துவிட்டு 18 மணிநேரமாக சிறுநீர் கழிக்காத நபர்- கடைசியில் நடந்த விபரீதம்!

சீனாவில் ஒரே நேரத்தில் 10 பீரை குடித்து காலி செய்துவிட்டு 18 மணிநேரம் தூங்கியவருக்கு சிறுநீர் பை சிதைவு ஏற்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஹூ என்பவர் 10 பீருக்கு மேல் குடித்துவிட்டு கிட்டத்தட்ட 18 மணிநேரம் தூங்கியுள்ளார். இடையில் அவர் சிறுநீர் கழிக்கக் கூட, எழுந்திரிக்கவில்லை. இதனால் அவரது சிறுநீர் பையில் அதிகளவில் சிறுநீர் தேங்கியுள்ளது. அளவுக்கதிகமான சிறுநீர் தேக்கத்தால் சிறுநீர் பை சிதைந்துள்ளது. இதனால் அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்த அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக