Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 9 ஜூன், 2020

ஆளுக்கு 2 வாங்கும் விலையில் நோக்கியா 5310; அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க!

நோக்கியா பிராண்டட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், அதன் நோக்கியா 5310 பீச்சர் போனை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக 'டீஸ்' செய்யத் தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நோக்கியா 1.3 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான நோக்கியா 5310 மொபைலின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதன் முழு அம்சங்கள் என்ன? என்பதை பற்றியெல்லாம் அறிய தெடர்ந்து படிக்கவும்.

நோக்கியா மொபைல் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக இந்த லேட்டஸ்ட் பீச்சர் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த ட்வீட்டில் "ரீமிக்ஸிற்கான கவுண்டன் தொடங்கியது. நீங்கள் #NeverMissABeat க்கு தயாரா? # Nokia5310." என்று பதிவிடப்பட்டுள்ளது.

புதிய நோக்கியா 5310 ஆனது பழைய நோக்கியா மொபைலான Nokia 5310 Xpress Music வடிவமைப்பின் கீழ் 2G ஆதரவு ஒரு மொபைல் ஆகும்.

நோக்கியா 5310 பீச்சர் போனின் விலை:

நோக்கியா நிறுவனம் கடந்த 2007 இல் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்கை வெளியிட்ட நேரத்தில், அது கருப்பு / சிவப்பு மற்றும் கருப்பு / நீல வண்ண விருப்பங்களில், டிஸ்பிளேவின் இடது பக்கத்திற்கு அருகில் மூன்று பொத்தான்களுடன் வந்தது.

இருப்பினும், புதிய நோக்கியா 5310 ஆனது வெள்ளை / சிவப்பு மற்றும் கருப்பு / சிவப்பு வண்ண விருப்பங்களில் வருகிறது ஆனால் டிஸ்பிளேவிற்கு அருகில் எந்த பாடி பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை.

நோக்கியா 5310 மொபைல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.3,110 க்கு அறிமுகம் ஆகியுள்ளது. இருப்பினும் இது இந்தியாவில் இன்னும் கம்மியான விலைக்கு, அதாவது ரூ.3000 என்கிற பட்ஜெட்டிற்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 5310 பீச்சர் போனின் டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பு:

அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய நோக்கியா 5310 ஆனது பல மேம்பாடுகளுடன் வருகிறது, இருப்பினும், எச்எம்டி குளோபல் இந்த போனை, குறிப்பாக அதன் முன்னோடிகளைப் போலவே "இசை ஆர்வலர்களுக்காக" வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்துகிறது. 2ஜி அம்சம் கொண்ட இந்த போன் 2.4 இன்ச் அளவிலான கியூவிஜிஏ டிஸ்ப்ளேவுடன், முன் பக்கம் எதிர்கொள்ளும் டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் பாடி கீபேட் உடன் வருகிறது. இந்த போன் டூயல் சிம் மற்றும் மினி சிம்மை ஆதரிக்கும் ஒற்றை சிம் விருப்பங்களில் அறிமுகம் ஆகியுள்ளது.

ப்ராசஸர் மற்றும் மெமரி:

இந்த புதிய நோக்கியா 5310 பீச்சர் போன் ஆனது மீடியாடெக் MT6260A SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 8MB ரேம் கொண்டுள்ளது. இந்த போன் நோக்கியா சீரிஸ் 30+ மென்பொருளின்கீழ் இயங்குகிறது மற்றும் 16MB அளவிலான இன்டர்னல் மெமரியை கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் வழங்குகிறது.

பேட்டரி மற்றும் ஸ்டான்ட்-பை டைம்:

பேட்டரியைப் பொறுத்தவரை, இதில் 1200 எம்ஏஎச் அளவிலான நீக்கக்கூடிய பேட்டரி உள்ளது, இது ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வேரியண்ட்களில் 7.5 மணி நேரம் வரை பேச்சு நேரத்தை உறுதிப்படுத்துகிறது. இரட்டை சிம் வேரியண்ட்டில் 22 நாட்கள் என்கிற காத்திருப்பு நேரத்தையும், ஒற்றை சிம் வேரியண்ட்டில் 30 நாட்கள் என்கிற காத்திருப்பு நேரத்தை வழங்குகிறது.

கேமராக்கள் மற்றும் கனெக்டிவிட்டி:

நோக்கியா 5310 அதன் பின்புறத்தில் ஃபிளாஷ் கொண்ட விஜிஏ கேமராவைக் கொண்டுள்ளது. உடன் எம்பி 3 பிளேயர் மற்றும் எஃப்எம் ரேடியோ போன்ற அம்சங்களையும் ஆதரிக்கிறது. இது அளவீட்டில் 123.7 x 52.4 x 13.1 மிமீ மற்றும் 88.2 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக