ஒற்றைத் தலைவலி உடனடியாக சரி செய்வதற்கு கடைகளில் தலைவலி மாத்திரைகள் கிடைக்கிறது. அதை உபயோகித்து வருகின்றனர் பலரும். ஆனால் அந்த தலை வலி மாத்திரைகளின் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. தலைவலி மாத்திரைகள் வலி நிவாரணிகள் போன்ற மாத்திரைகளை நாம் தினமும் எடுத்து வந்தால் கிட்னி பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே வலி நிவாரணி தலைவலி மாத்திரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இது போன்ற பிரச்சினைகளை இயற்கையாக விரட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிலும் இந்த தலைவலி பிரச்சனையை இயற்கையாகவே வீட்டிலிருந்தே விரட்டிவிடலாம்.
இந்த தலைவலியை விட்டு மருந்தைக் வைத்த விரட்டுவதற்கு மிளகு ஒன்றே போதும். வெளிநாட்டில் உள்ள வாழ்க்கைமுறை மற்றும் உணவியல் நிபுணர் லியூக் சமீபத்தில் இதைக் கூறியுள்ளார். மிளகு பலவிதமான தலைவலி பிரச்சினைகளிலிருந்து விடுதலை தரும் என்று கூறி உள்ளார். மிளகு கொண்டு செய்த ஒரு வீட்டு மருத்துவமுறை தலைவலியை விரட்டி விடும் என்று கூறுகிறார் இந்த வெளிநாட்டு நிபுணர். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே நம் முன்னோர்களும் இதையே செய்து வந்துள்ளனர். எனவே இது நல்ல முறையில் குணமளிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் அவர் கூறியதில் அதிகபட்சமாக மிளகு நமது சாப்பாட்டில் எடுத்துக் கொண்டால் தலைவலி போன்ற பிரச்சனைகள் பறந்துவிடும் என்று அவர் கூறுகிறார். இன்று பலருக்கும் தலைவலி பிரச்சினை வருகிறது.
அதிகபட்ச வேலை சரியான தூக்கமின்மை பதட்டம் விட்டமின் பற்றாக்குறை கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக தண்ணீர் குடிக்காமல் இருத்தல் போன்ற பல காரணங்கள் தலைவலி வருவதற்கு காரணமாக அமைகிறது. இதுபோன்ற காரணங்களால் வரும் அனைத்து தலைவலியையும் மிளகு கொண்டே சரிப்படுத்தி விடலாம் என்று நிபுணர் கூறுகிறார்.
மேலும் எளிமையாக தயாரிக்கக்கூடிய இந்த மருந்து வேறு சில பிரச்சனைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார். தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது அஜீரண கோளாறு பிரச்சினைகள் சரியாகிவிடும் என்று கூறுகிறார். சிலருக்கு வயிற்று வலியும் குணமாகிவிடும் என்று கூறுகிறார். இந்த மருந்து இரவில் நல்ல தூக்கத்தை வருவதற்கும் காரணமாக அமைகிறது என்று கூறுகிறார். இந்த மிளகு பலவிதமான நோய்களுக்கும் ஒரு நல்ல மருந்து போன்று செயல்படுகிறது என்பதினால் இதை ஒரு சூப்பர் உணவு என்று கூறுகிறார். நிச்சயமாக நமது உணவில் மிளகு எப்பொழுதுமே இருக்க வேண்டும். அனைத்து சமையல் வகைகளிலும் முடிந்த அளவு மிளகு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
எதனால் மிளகு இவ்வளவு நன்மை செய்கிறது?
மிளகு சாப்பாட்டிற்கு ஒரு நல்ல சுவை கொடுக்கும். ஆனால் அதோடு அது ஒரு வேலை முடிந்து விடுவது இல்லை. இதில் பலவிதமான மினரல்ஸ் மற்றும் நியூட்ரான்கள் நிறைந்து காணப்படுகிறது என்று நிபுணர் விளக்குகிறார். அந்த விட்டமின் மற்றும் மினரல் சத்துகள் உடலுக்கு பல விதமான நன்மைகளையும் தருகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். இந்தியாவிலுள்ள ஆயுர்வேத மருத்துவமும் பலநூறு வருடங்களாக மிளகு பயன்படுத்தி பல வியாதிகளை குணப்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார். சூடு செய்து நெய் அல்லது தண்ணீரில் ஒரு இரவு முழுக்க ஊற வைத்து காலையில் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும் அற்புதமான விஷயம் என்று கூறுகிறார். இது உங்கள் தலைவலியை மட்டுமல்ல இன்னும் பல விதமான உடல் பிரச்சனைகளையும் சரி செய்து விடும் என்று கூறுகிறார். மிளகில் இருக்கும் ஒரு காரணி ஆனது இயற்கையாகவே anti-inflammatory தன்மை கொண்டதாக இருக்கிறது. இது உடலில் ஏற்படும் வலிகளை இயற்கையாகவே கொள்ளக்கூடிய சக்தி படைத்ததாக இருக்கிறது இதை இயற்கையான வலி நிவாரணி என்று குறிப்பிடுகிறார்கள்.
மிளகு மேலும் பல விதமான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் கொண்டதாக இருக்கிறது. இதில் விட்டமின் ஏ விட்டமின் சி மற்றும் விட்டமின் கே உள்ளது அதுபோக இதில் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் ரிபோஃப்ளோவின் போன்ற பலவிதமான நன்மை விளைவிக்கக் கூடிய மினரல்கள் ஒளிந்துள்ளது. இது அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்டது. உணவில் உள்ள மற்ற நியூட்ரிஷியன் கள் உங்கள் உடலில் வேகமாக வருவதற்கும் உதவி செய்கிறது இயற்கையாகவே இது ஒரு சூப்பர் உணவாக திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக