>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 15 ஜூன், 2020

    தினம் நாம் அழுவதால் நம் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

    தினம் சிரிப்பதால் மட்டும் அல்ல, அழுவதாலும் நமக்கு பல நன்மைகள் கிடைப்பதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    இன்றைய காலகட்டத்தில், அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ விரும்புகிறார்கள். எல்லோரும் தங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள். நல்ல ஆரோக்கியத்திற்காக சிரித்தப்படி வாழ்நாளை கழிக்கவேண்டும் எனவும் அடிக்கடி அறிவுறுத்தப்படுகிறது, ஆனால் அழுவதாலும் நமக்கு நன்மை கிடைக்கும் என சில ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் தினம் அழுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

    பாரம் குறைதல் 

    துன்பம் வரும் போது நாம் அழுவதால் மனதின் பாரம் குறைந்து நிம்மதியாக உணரத் தொடங்குகிறது. விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், கண்ணீரின் மூலம், மனதின் சுமை நீங்கி, இலகுவாக உணர்கிறோம் என்று தெரிய வந்துள்ளது.

    எதிர்மறை ஆற்றல் விலகும் 

    மனதில் ஏதேனும் அழுத்தம் இருக்கும்போது அல்லது சுமை இருக்கும்போதும் நமக்கு அழுகை வருகிறது. இதன்போது உங்கள் இதயத்தில் சில எதிர்மறை எண்ணங்கள் இருந்தால், உங்கள் கண்ணீருடன் அது விலகிச் செல்கிறது. ஆம்., நாம் அழும்போது, ​​நமக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் கண்ணீருடன் வெளியே செல்கின்றன.

    கண்கள் சுத்தமாகிறது 

    கண்கள் தூசி மற்றும் அழுக்கு மற்றும் மாசுபாட்டையும் எதிர்கொள்ள வேண்டும். இதன்காரணமாக பல தீங்கு விளைவிக்கும் கூறுகள் கண்களுக்கு அருகில் குவியத் தொடங்குகின்றன, ஆனால் நாம் அழும்போது, ​​இந்த கூறுகளும் கண்ணீருடன் வெளியே வருகின்றன. கண்ணீரில் உள்ள லைசோசைம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு கூறுகள் ஆகும். கண்ணீர் வெளியே வரும்போது, ​​நமது கண்கள் தெளிவாகின்றன.

    கண்களில் ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது 

    நீங்கள் அழவில்லை என்றால் கண்களின் சவ்வின் மென்மையானது குறையத் தொடங்குகிறது, இது நம் கண்பார்வையை பாதிக்கிறது. கண்களில் இருந்து வரும் கண்ணீர் இந்த மென்மையை பராமரிக்கிறது. இது கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கும். 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக