சிவன் மீது அதீத பக்தி
மதுரை சிந்தாமணி ரோடு நாகு பிள்ளை தோப்பு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் பொன் ராமமூர்த்தி. சிவன் மீது அதீத பக்தி கொண்ட இவர் ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமி அமாவாசை தினத்திலும் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்று சிவதரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
வழிபாட்டுத் தளங்கள் மூடப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது அதேபோல் வழிபாட்டுத் தளங்கள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொன் ராமமூர்த்தி சுந்தரமகாலிங்கம் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த பொன் ராமமூரத்தி கூறுகையில், சுந்தரமகாலிங்கம் செல்ல முடியாத காரணத்தால் கடந்த பௌர்ணமி தினத்தன்று தனது டீக்கடையில் உள்ள ஃபிரிட்ஜுக்குள் சிவன் அமர்நாத் பனி லிங்க வடிவில் காட்சி தந்தார் என தெரிவித்தார்.
பல்வேறு வடிவத்தில் சிவபெருமான் காட்சி
அதேபோல் கடந்த 10 தினங்களாகவே பல்வேறு வடிவத்தில் சிவபெருமானை தான் கண்டு தரிசித்து வருவதாக கூறினார். இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் பொன் ராமமூர்த்தி டீக்கடைக்கு வருகை தந்து சிவலிங்க தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
பனி லிங்கத்திற்கு வழிபாடுகள்
இந்த லிங்கத்திற்கு டீக்கடை அருகில் உள்ள ராஜகாளியம்மன் கோயில் பூசாரி அங்கு வழிபாடு முடித்து விட்டு பனி லிங்கத்திற்கும் வழிபாடுகள் நடத்தி வருகிறார்.
சிவபெருமானே காட்சி தருகிறார் என நம்புதாக பேட்டி
பூசாரி உமாநாத் இதுகுறித்து கூறுகையில், ராம மூர்த்தி அதீத சிவபக்தர் என்பதால் அவருக்கு சிவபெருமான் காட்சி தருகிறார் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அமர்நாத் சென்று சிவ வழிபாடு நடத்த இருந்த எனக்கு தற்போது அந்த சிவ பெருமானே காட்சி தற்போது காட்சி தருகிறார் என முழுமையாக நம்புவதாக தெரிவித்தார்.
டீக்கடைக்கு படையெடுக்கும் அக்கம் பக்கத்தினர்
பொன் ராமமூரத்தி தினந்தோறும் கடையை திறந்தவுடன் சிவபெருமானை வழிபட்ட பிறகே டீக்கடை வியாபாரத்தை தொடங்குகிறார். ராமமூர்த்தி டீக்கடைக்கு அக்கம் பக்கத்தினர் தரிசனம் மேற்கொள்ள படையெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக