சக்தெங் வனவிலங்கு சரணாலயம் இருக்கும் இடம் எல்லைப் பிரச்சினைக்கு உட்பட்டது என சீனா தெரிவித்துள்ளது. பூட்டானுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை இன்னும் முழுவதுமாக நிர்ணயம் செய்யப்படவில்லை. எனினும், சக்தெங் வனவிலங்கு சரணாலயம் எந்த நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது என இத்தனை நாட்களாக எந்தப் பிரச்சினையும் இல்லை.
தற்போது சீனா புதிய பிரச்சினையை கிளப்பியுள்ள நிலையில், சக்தெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் இறையாண்மை எல்லைக்குள் இருப்பதாக பூட்டான் அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. சக்தெங் வனவிலங்கு சரணாலயத்திற்கு இதுவரை எந்தவொரு சர்வதேச நிதியுதவியும் வழங்கப்படவில்லை. ஆக, முதல்முறையாக சர்வதேச நிதியுதவிக்கு முன்மொழியப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனா புதிய எல்லைப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
இக்கூட்டத்தில் சீனாவுக்கு நேரடி பிரதிநிதி இருந்தாலும், பூட்டானுக்கான பிரதிநிதி இல்லை. ஆகவே பூட்டானின் பிரதிநிதியாக இந்திய ஐஏஎஸ் அதிகாரி அபர்ணா சுப்ரமணி வாதிட்டார். சக்தெங் சரணாலய விவகாரத்தில் சீனா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பூட்டானின் நிலைப்பாட்டை கேட்காமல் முடிவுக்கு வரக்கூடாது என அபர்ணா சுப்ரமணி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அபர்ணா சுப்ரமணிக்கு பூட்டான் அரசு அனுப்பிய குறிப்பில், “சக்தெங் வனவிலங்கு சரணாலயம் பூட்டானின் இறையாண்மை எல்லைக்கு உட்பட்ட பகுதி” என உறுதிபட தெரிவித்தது. சீனாவின் எல்லை உரிமைகோரலை பூட்டான் மறுத்ததை தொடர்ந்து சக்தெங் வனவிலங்கு சரணாலயத்திற்கு நிதியுதவி அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக