Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 25 ஜூன், 2020

கொரோனா-வை விரட்ட பூண்டு உதவுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

கொரோனா வைரஸ் தொற்றுக்கள் நாளுக்கு நாள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகரித்து வருகிறது. இந்த உயிர்கொல்லி வைரஸ் காரணமாக பலர் இறந்து வருகின்றனர். எனினும் இதுவரை இந்த வைரஸை விரட்டுவதற்கான மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா சிகிச்சை குறித்து பல பதிவுகள் சமூக வலைப்பின்னல் தளங்களில் காணப்படுகின்றன, அதில் ஒன்று பூண்டு உட்கொள்ளுவதால் கொரோனாவின் விளைவை கட்டுப்படுத்தலாம் என்பதாகும்.  

பூண்டு பயன்படுத்தி கொரோனா வைரஸைத் தடுப்பது குறித்து இதுபோன்ற பதிவுகள் வைரலாகிய பின்னர் மக்கள் பூண்டை அதிகளவு உண்டு பல வகையான எதிர்வினைகளை பெற்றுள்ளனர். எந்த உத்தரவாதமும் இல்லாதபோது, ​​பூண்டு அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடாய் அமையும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த பூண்டுகளை ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் நோய்களுக்கு எதிராக போராடும் சக்தியை உடலுக்கு அளிக்கிறது என்ற கருத்துக்கு மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!