Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 25 ஜூன், 2020

பூனையும் எலியும்

ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான்.

பூனை வந்ததும் எலிகளால் முன்பு போல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. 

அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதன் நட்பு நமக்கு வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது.

வயதான எலி சொல்வதைக் கேட்டு மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ள வேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. 

எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு, அந்தப் பூனையுடன் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்கலாம் என்று நினைத்து அந்த வீட்டிலேயே தங்கி விட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்து விட்டது.

பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. 

பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் திண்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்து சாப்பிட்டது.

நீதி :

எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக