>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 4 ஜூன், 2020

    ஸ்நாப் சாட்டிலும் ட்ரம்ப்புக்கு தடா! ஏன் தெரியுமா?

     
    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகள் நிறவெறிக்கு ஆதரவாக இருப்பதால் அவரது கருத்துகளை ப்ரமோட் செய்யப் போவதில்லை என ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளது

    அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின இளைஞர் ஒருவரை விசாரணை செய்த போலீசார் அவரை கீழே தள்ளி கழுத்தில் காலால் நெறித்து கொலை செய்தார். அது சம்மந்தமாக வீடியோ ஒன்று பரவி உலகெங்கும் கண்டனங்களைப் பெற்றது. இதனையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்

    இதையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த போலீஸ்காரரின் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் கணவரின் செயல் தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த போராட்டக்காரர்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘கலைந்து செல்லவில்லை என்றால் சுடப்படுவீர்கள்’ என்று டிவீட் செய்ய, அது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என டிவிட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தங்கள் முகப்புப் புகைப்படத்தை கருப்பு நிறத்தில் மாற்றி தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் 22 கோடி பேரால் பயன்படுத்தப்படும் ஸ்நாப் சாட்டில் டர்ம்ப்பின் கணக்கை ப்ரமோட் செய்யப்போவதில்லை என ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது கணக்கு அப்படியே தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக