Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 15 ஜூன், 2020

திருப்பதிக்கு பரவிய கோயம்பேடு கொரோனா!

 திருப்பதி ஏழுமலையான் கோவில் ...
கோயம்பேடு தொடர்பு காரணமாக திருப்பதி சிறைக்கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமல்லாமல் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கோயம்பேடு காய்கறி சந்தை. தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததும், உள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் கோயம்பேட்டுக்கு படையெடுத்ததும் கொரோனா பரவ முக்கிய காரணமாக அமைந்தது.

தற்போது ஆந்திர மாநிலத்திலும் கோயம்பேடு தொடர்பு மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் இருக்கும் பிச்சாட்டூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் குற்ற வழக்கு ஒன்று தொடர்பாக கடந்த ஞாயிறு அன்று திருப்பதி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையின் டி பிளாக்கில் இருந்த மேலும் 72 கைதிகள், சிறை ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதி நகராட்சியினர் சிறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில கிருமிநாசினி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிச்சாட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் அருகிலுள்ள சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அடிக்கடி சென்று காய்கறிகளை வாங்கி வருவது வழக்கம்.

திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டு கொரோனா தொற்று உள்ளது என்று கண்டறியப்பட்ட நபரும் அடிக்கடி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக