Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 5 ஜூன், 2020

கேரளாவில் யானை கொலை - ஒருவர் கைது.!


அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கேரளா வனத்துறை அறிவித்துள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது.
திடீரென அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை முடியில், அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அம்மாநில முதல்வர் யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, யானை உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுருந்தது. இந்த நிலையில், அன்னாசி பழத்தில் பட்டாசு வைத்து யானையை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கேரளா வனத்துறை அறிவித்துள்ளது. அன்னாசியில் பட்டாசு வைத்து கருவுற்றிருந்த யானையை கொன்றது விஸ்வரூபமான நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக