ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி அமர்ந்திருந்த சிறுமியின் பின்னால் பதுங்கி வந்த சிறுத்தை சிறுமியை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பெய்ல்பரோரா வனப்பகுதி
உத்தரகாண்ட் மாநிலம் பெய்ல்பரோரா வனப்பகுதிக்கு உட்பட்ட சுனாகான் பகுதியை சேர்ந்த எட்டு வயது பெண் மம்தா, அவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் கால்வாய் கரையோரப் பகுதியில் ஹெட்போன் அணிந்து பாட்டுக் கேட்டபடி இருந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை
இதுகுறித்து வனத்துறைக்கு புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சிறுமி மம்தா கால்வாய் கரையோரப் பகுதியில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த போது அந்த சமயத்தில் அந்த பகுதியின் அருகில் வந்த சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்கி தூக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுத்தை வந்ததை கவனிக்காமல் இருந்திருக்கலாம்
சிறுமி மம்தா, ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி இருந்துள்ளதால் சிறுத்தை வந்ததை கவனிக்காமல் இருந்திருக்கலாம் எனவும் அந்த சமயத்தில் சிறுத்தை தாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சிறுமி அமர்ந்திருந்த இடத்தில் சீப்பு மற்றும் ஹெட்போன் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமியின் உடல் அருகில் இருந்த புதரில் மீட்கப்பட்டது
இதையடுத்து சிறுமியின் உடல் அருகில் இருந்த புதரில் மீட்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 பேர் சிறுத்தைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
7 கேமராக்களும் 2 கூண்டுகளும்
அதேபகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் அதனை கண்காணிக்க 7 கேமராக்களும் 2 கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிக்குள் சிறுத்தை வந்த சமயத்தில் கிராம மக்கள் சத்தம் போட்டதால் சிறுத்தை கூண்டுக்குள் சிக்காமல் காட்டுக்குள் ஓட்டம் பிடித்து விட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்களிடம் ஒப்படைப்பு
புதரில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
ஹெட்போன் அணிந்திருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்
பொதுவாக ஹெட்போனில் பாட்டுக்கேட்டப்படி வாகனத்தை ஓட்டும்போதும், ரயில் தண்டவாளத்தை கடக்கும் போதும் பாதுகாப்பாக ஹெட்போனை கலட்டி வைக்க வேண்டும். அதேபோல் ஹெட்போன் அணிந்திருக்கும் அனைத்து சமயத்திலும் சுற்றுவட்டாரத்தில் என்ன நடக்கிறது என்ற கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக