Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 25 ஜூன், 2020

அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவுவது ஏன்? திடுக்கிடும் தகவல்



கடந்த சில நாட்களுக்கு முன் வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகம் பரவி வந்த நிலையில் தற்போது மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

இதற்கு முக்கிய காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் தான் என்று கூறப்படுகிறது
 
சென்னையில் அதிகமாக பரவி வந்த நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களுக்கு முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும், இதனால் தான் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவத் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இதனால் தான் தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு இபாஸ் தேவை என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வது கடினம் என்பதும், தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே இபாஸ் எடுத்து கொண்டு சொந்த ஊர் செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக