பாலிவுட்டில் ஸ்டாராக வலம் வரும் அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல துறைகளில் வித்தகராக இருந்தாலும், அவர் செய்து வரும் சமூக சேவைகளுக்காக பொதுவெளியில் பாராட்டப்பட்டு வருகிறார்.
இப்போது அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் லஷ்மி பாம் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார் அக்ஷய் குமார்.
இந்தப் படம் மே 22 ஆம் தேதி திரைக்கு வருவதாக இருந்த நிலையில், தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக