Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 28 ஜூலை, 2020

விவோ வி19 ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000-வரை விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!


 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி


விவோ நிறுவனத்தின் விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும் தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
கொண்ட விவோ வி19 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.27,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.24,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ வி19 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.31,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை இப்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற பல்வேறு ஆன்லைன் போர்ட்டல்களில் பிரதிபலிக்கிறது. இந்த விலைக் குறைப்பை முதலில் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் வழங்கியது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
விவோ வி19 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.
விவோ வி19 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவோ வி19 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது, மேலும் 33வாட் டூயல் எஞ்ஜின் பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் மற்றும் 186.5 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!