பப்ஜி
கேமிற்கு நிகரான அதிக ஸ்ட்ரீமிங் தள பார்வையாளர்களைக் கொண்டிருப்பதால் கால் ஆஃப்
டூட்டி மொபைல் மிகவும் பிரபலமான கேம்களில் ஒன்றாக மாறியுள்ளது. பப்ஜி மொபைல்
கேமிற்கு போட்டியாக, சிஓடி மொபைல் புதிய அப்டேட்டை
கொண்டுவரத் தயாராகிவிட்டது. புதிய இரண்டு வார்ஃபேர் மேப் உடன் வரும் வாரத்தில்
களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
COD
மொபைல் கேமில் வரவிற்கும் இந்த புதிய அப்டேட்டின் சோதனை உருவாக்கம், ஷிப்மென்ட்
மற்றும் டெர்மினல் போன்ற புதிய வரைபடங்கள் எதிர்காலத்தில் சேர்க்கப்படவுள்ள புதிய
வரைபடங்களாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி,
டெர்மினல் ஒரு விமான நிலையத்தில் அமைந்துள்ள ஒரு நடுத்தர அளவிலான வரைபடமாக
இருக்கும்.
இந்த
புதிய வரைபடத்தில் உட்புறம் மற்றும் வெளிப்புற அமைப்பு இரண்டையும்
உள்ளடக்கியுள்ளது. இதனால் வீரர்கள் தடைகள் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் நகர
முடியும். ஷிப்மென்ட் என்பது மிகச் சிறிய வரைபடமாக இருக்கும், இது வேகமான ஷார்ட்
கேம் அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கும். ஆனால் டெத்மாட்ச் அல்லது சர்ச் அண்ட் கில்
போன்ற வரையறுக்கப்பட்ட முறைகளில் ஷிப்மென்ட் வரைபடம் பயன்படுத்தப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்
9, 2020 அன்று COD மொபைல் சீசன் 9 வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீசன் 9 இல் 'அல்காட்ராஸ் (Alcatraz)' என்ற தலைப்பில் மற்றொரு வரைபடம்
சேர்க்கப்படும் என்று வதந்தி பரவியுள்ளது. இருப்பினும், அதைப் பற்றி உறுதியான
விவரங்கள் எதுவும் இல்லை. சமீபத்திய கன்ஸ்மித் ஆயுத இணைப்பு அமைப்பு வரவிருக்கும்
பருவத்தில் ஒரு முக்கிய ஈர்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இது
ஏற்கனவே COD மொபைல் சீசன் 9 இன் சோதனை சேவையகங்களில் நேரலையில் உள்ளது. இதன்படி
இனி ஐந்துக்குப் பதிலாக 10 பேலோட் இடங்களை வைத்திருப்பதற்கான வாய்ப்பை வீரர்கள் பெறுவார்கள்.
வீரர்கள் வரவிருக்கும் சீசனில் தங்கள் ஆயுதங்களுடன் பல்வேறு இணைப்புகளைச்
சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மஸ்ஸில்,
ஆப்டிக்ஸ், லேசர் சைட், க்ரிப்பர், மேகஸின் மற்றும் ரியர் கிரிப் போன்ற ஆயுதங்கள்
எதிர்பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. COD மொபைல் சீசன் 9 இன் சோதனை
சேவையகங்களில் புதிய 10 vs 10 மல்டிபிளேயர் கேம் பயன்முறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயன்முறையில், 10 வீரர்கள் உட்பட இரண்டு அணிகள் ஒரு அணி டெத்மாட்சில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு விளையாடலாம். சீசன் 9 எப்படி இருக்கும் என்பதற்கான கூடுதல் தகவல்கள் வரும் அடுத்த வாரங்களில் தெளிவாகத் தெரியும் என்று கேமர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக