பிரபல
நடிகர் ஷாம் (Actor Shaam) உட்பட 12 பேரை
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் அருகிலுள்ள அவரது குடியிருப்பில் சூதாட்ட
நடவடிக்கையில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
சூதாட்டத்திற்கு (Gambling) பயன்படுத்தப்படும்
டோக்கன்கள் நடிகருக்குச் சொந்தமான பிளாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக
புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். லாக்டௌன் நேரத்தில், மற்ற பிரபல தமிழ் நடிகர்கள்
உட்பட பலர், சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார்
தெரிவித்தனர். வேறு எந்த நடிகர்களும் கைது செய்யப்பட்டார்களா என்பது இன்னும்
தெளிவாகத் தெரியவில்லை.
உறுதிப்படுத்தப்படாத
தகவல்களின்படி, சூதாட்டத்தில் பெரிய தொகையை இழந்த ஒரு ஒரு பிரபலமான நடிகர், இந்த
சட்ட விரோத சூதாட்டம் பற்றிய தகவல்களை காவல் துறைக்கு அளித்ததுள்ளார்.
நடிகர்
ஷாம் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டோக்கன்களைப் பயன்படுத்தி எவ்வாறு
இந்த சூதாட்டம் நடத்தப்பட்டது என்பது பற்றி விசாரித்து வருவதாக ஒரு மூத்த போலீஸ்
அதிகாரி தெரிவித்தார்.
ஒரு
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இறுதி ஆண்டு இளங்கலை மாணவர் ஒருவர் தற்கொலை
செய்துகொண்ட அடுத்த நாளே இந்த விவகாரம் வெளி வந்துள்ளது.
அந்த
இளைஞன் தனது பணியிடத்திலிருந்து 20,000 ரூபாயை எடுத்து அதை ஆன்லைன் விளையாட்டிற்கு
பயன்படுத்தியுள்ளார். அந்த பணத்தை அவர் விளையாட்டில் இழந்து விடவே,
மனச்சோர்வடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு காவல் துறை அதிகாரி
தெரிவித்தார். அண்மையில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் ஆன்லைன்
கேமிங்கை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சட்டத்தின் அவசியத்தை
எடுத்துரைத்தது. இளைஞர்களிடையே ஆன்லைன் கேமிங் / சூதாட்ட பழக்கம் ஏற்பட்டு,
அவர்கள் அதற்கு அடிமையாகிவிடுவதால், அவர்கள் தங்கள் குடும்பங்களை நிதி
நெருக்கடியில் ஆழ்த்தி விடுவதாக மதுரை பெஞ்ச் சுட்டிக்காட்டியது.
சீட்டாட்டம்
தொடர்பான ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி புகழேந்தி, ரம்மி பேஷன், நசாரா,
லியோவேகாஸ், ஸ்பார்டன் போக்கர், ஏஸ் 2 த்ரீ, போக்கர் தங்கல், பாக்கெட் 52, மை 11
சிர்கே மற்றும் ஜெனிசிஸ் கேசினோ ஆகிய ஆன்லைன் விளையாட்டுகளை பட்டியலிட்டு,
தழ்நாட்டில் இதற்கான சட்டத்தின் அவசியத்தை விளக்கினார். பணம் வைத்து
விளையாடப்படும் அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் தெலுங்கானா அரசாங்கம் விதித்த
தடையை அவர் மேற்கோள் காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக