அட்டகத்தி,
பீட்சா, சூது கவ்வும் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் தயாரித்த சிவி குமார்,
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போட்டியாக 20 ரூபாய்க்கு புத்தம் புது தமிழ்
திரைப்படங்களுக்கான ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
‘ரீகல்
டாக்கீஸ்’ (Regal Talkies) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஓடிடி தளத்தை ஜூலை முதல்
சேவைக்கு வரும் என்று சிவி குமார் தெரிவித்துள்ளார். இது முழுக்க முழுக்க தமிழ்
படங்களுக்கான ஓடிடி தளம் என்றும் கூறப்படுகிறது.
அமேசான்
பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற இணையதளங்கள் மாத சந்தா, ஆண்டு சந்தா போன்றவற்றை
வசூலித்து படம் பார்க்கும் அனுமதியை வழங்குகிறது. ஆனால் ரீகல் டாக்கீஸ்-ல் நாம்
பார்க்க விரும்பும் படத்திற்கு மட்டும் 20 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதால்
மக்களிடையில் பெரும் அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவத்தின் கீழ் விஷ்ணு விஷால்
நடிப்பில் இன்று நேற்று நாளை 2, கலையரசன் நடிப்பில் டைட்டானிக், மிர்னாலினி ரவி
நடிக்கும் ஜாங்கோ உள்ளிட்ட படங்களும் தயாரிப்பில் உள்ளது.
Regal Talkies launching on 8th July . A pay per view
OTTin tamil . Support us friends 🙏@regaltalkies @thirukumaranEnt @onlynikil @icvkumar pic.twitter.com/W6Uja8Otva
—
C V Kumar (@icvkumar) July 3, 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக