Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஜூலை, 2020

தடை செய்யப்பட்ட செயலிகளுக்காக 200 இந்திய செயலிகள் உருவாக்கம் -அமைச்சர் தகவல்!

 
இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்குப் பதிலாக 200 செயலிகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் ரவிபிரசாத் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய, சீன எல்லையான கால்வான் என்ற பகுதியில் சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, மத்திய அரசின் உத்தரவின்படி டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இந்த செயலிகளின் கோடிக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் பாதுகாப்பு கருதி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்துள்ள்து.

இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள மத்திய அமைச்சர் ரவிபிரசாத் சங்கர் ‘இந்தியர்களின் தரவுகளை மற்றவர்கள் கையாளுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நம் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலிக்கும் இடமில்லை. இந்தியாவில் தற்போது 200க்கும் மேற்பட்ட செயலிகள் உருவாக்கத்தில் உள்ளன’ எனக் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக