>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 28 ஜூலை, 2020

    ஆகஸ்ட் 2020-ல் இருந்து கார், பைக்களின் ஆன் ரோட் விலை குறையலாம்! எப்படி?

    எந்த இன்சூரன்ஸ்
    இந்தியாவில், வாகனங்களை வாங்குவது இன்று வரை ஒரு கோலாகலமான நிகழ்வு தான். வீட்டில் ஒரு விலை மலிவான இரு சக்கர வாகனம் வாங்குவது தொடங்கி, பென்ஸ் கார் வாங்குவது வரை எல்லாவற்றையும் நாம் கொண்டாடுகிறோம். சரி விஷயத்துக்கு வருவோம்.
    பொதுவாக ஒரு புதிய கார் அல்லது இரு சக்கர வாகனத்தை வாங்குகிறோம் என்றால் அதற்கான ஆன் ரோட் விலையை, சாலை வரி, பதிவுக் கட்டணம், இன்சூரன்ஸ் என எல்லாவற்றையும் சேர்த்து தான் கணக்கிடுவோம்.
    இப்போது இந்தியாவில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் ஆன் ரோட் விலை கொஞ்சம் குறையும் என்கிறார்கள் நிபுணர்கள். எப்படி விலை குறையும்?
    இன்சூரன்ஸ்
    அதை கார் அண்ட் பைக் (Car and bike) கம்பெனி தரப்பில் இருந்து விளக்குகிறார்கள். இந்தியாவின் இன்சூரன்ஸ் துறையை நிர்வகிக்கும் ஐ ஆர் டி ஏ என்கிற அமைப்பு, நீண்ட கால இன்சூரன்ஸ் பேக்கேஜ் திட்டத்தை 01 ஆகஸ்ட் 2020 முதல் பின் வாங்க இருக்கிறதாம். எனவே கார் & இரு சக்கர வாகனங்களின் விலை கொஞ்சம் குறையும் என்கிறார்கள்.
    எந்த இன்சூரன்ஸ்
    இரு சக்கர வாகனங்கள் & கார்களுக்கு own-damage policy இன்சூரன்ஸ் & third-party இன்சூரன்ஸ் என இரண்டு இருக்கின்றன. புதிய வாகனங்களை வாங்கும் போது, கார் என்றால் மேலே சொன்ன இன்சூரன்ஸை 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனம் என்றால் 5 ஆண்டுகளுக்கும் எடுக்க வேண்டும். இது தற்போது கட்டாயமாக இருக்கிறது.
    ஒரு வருடம் போதும்
    இனி, 01 ஆகஸ்ட் 2020 முதல், own-damage policy-ஐ 3 ஆண்டுகளுக்கோ அல்லது 5 ஆண்டுகளுக்கோ வாங்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு வருடத்துக்கு own-damage policy எடுத்தால் போதுமாம். சொல்லப் போனால், இனி வாகனங்களை வாங்குபவர்கள், own-damage policy-ஐ ஒரு ஆண்டுக்கு மேல் வாங்க நினைத்தாலும் வாங்க முடியாதாம்.
    வழக்கம் போலத் தொடரும்
    ஆனால், third-party இன்சூரன்ஸ் வழக்கம் போல கார் என்றால் 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்கள் என்றால் 5 ஆண்டுகளுக்கும் எடுக்க வேண்டும். கடந்த செப்டம்பர் 2018-ல் தான் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, நீண்ட கால இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கார்களுக்கு 3 ஆண்டுகளும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளும் (own-damage policy + third-party) இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமாக இருந்து வருகிறது. இப்படி இன்சூரனஸ் கட்டாயமானதால், ஆட்டோமொபைல் விற்பனையிலும் இது எதிரொலித்தது
    தனி பாலிசி
    கடந்த 01 செப்டம்பர் 2019 முதல், own-damage policy இன்சூரன்ஸை தனியாகக் கொடுக்கச் சொன்னது ஐ ஆர் டி ஏ ஐ. ஆகஸ்ட் 2020 முதல் own-damage policy-ஐ ஒரு வருடமாக குறைத்து இருக்கிறார்கள். own-damage policy உடன் ஒப்பிடும் போது third-party இன்சூரன்ஸ் பாலிசிக்கான விலை குறைவு தானாம். எனவே 01 ஆகஸ்ட் 2020 முதல் ஆட்டோமொபைல்களின் விலை கொஞ்சம் குறையும் என்கிறார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக