>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 2 ஜூலை, 2020

    ஜூலை 27 முதல் ஹரியானாவில் பள்ளி-கல்லூரிகளை திறக்கப்படும்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

    அன்லாக் 2.0 (Unlock 2) காலகட்டத்தில் அரியானாவில் வணிக வளாகங்கள் திறக்கப்பட்ட பின்னர்,அரியானா அரசு இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. ஜூலை 27 அன்று மாநிலத்தில் பள்ளி-கல்லூரி மீண்டும் திறப்பதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டு உள்ளது.

    அரியானா பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் (Directorate School Education) வெளியிட்ட அறிக்கையின் படி, அரசு பள்ளியில் கோடை விடுமுறை ஜூலை 1 முதல் ஜூலை 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26 அன்று விடுமுறை முடிந்த பிறகு, ஜூலை 27 முதல் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி, பள்ளியைத் திறக்க ஏற்பாடுகளை தயார் செய்யுங்கள் எனக் கூறியுள்ளது.

    குருகிராம் மெட்ரோ சிட்டி பஸ் லிமிடெட் (ஜி.எம்.சி.பி.எல்- GMCBL) நகரில் 6 வழித்தடங்களுக்கான பேருந்து சேவையைத் தொடங்கியுள்ளது.

    இது தவிர, குருக்ராம் மற்றும் ஃபரிதாபாத்தில் வணிக வளாகங்களை திறக்க அரியானா நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷாப்பிங் மால் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இரு நகரங்களிலும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

    Haryana School

    மாலில் உள்ள சினிமா ஹால் மற்றும் கேமிங் பகுதி மூடப்பட்டிருக்கும். உணவகம் மற்றும் உணவு வளாகங்களும் 50% திறன் கொண்டதாக இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. மாலுக்கு வரும் ஒவ்வொரு நபரும் சமூக தூரத்தைப் பின்பற்றி முகமூடியைப் பயன்படுத்த வேண்டும். முகமூடி அணியாதவர்கள் ரூ .500 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக