Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஜூலை, 2020

3-ம் வீட்டில் ராகு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

உலக பற்றோடு இருக்கும் மனிதனே தவறு செய்வான். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே அகச் சிந்தனைகள் உருவாகும். ஐம்புலன்களையும் அடக்க பாடம் கற்பிப்பவரே ராகுபகவான். இவர் உறவுகளில் தாய் மற்றும் தந்தை வழி தாத்தாக்களை குறிப்பார். இடங்களில் பொந்துகள், குழிகள், படரும் கொடிகளையும் மேலும் உறுப்புகளில் தோலையும் குறிக்கிறார்.

ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார். ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். இந்த 18 வருடங்களில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவரை மிகப்பெரிய செல்வந்தராக மாற்றுவார்.

ராகு கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில், அவருக்கு மிக சிறப்பான யோகங்கள் ஏற்படும். அதே நேரம் அந்த ராகு பாதகமான நிலைகளில் இருந்தால் பல்வேறு கஷ்டங்கள் உண்டாகும்.

லக்னத்திற்கு 3-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு சொத்துக்கள் வந்து சேரும்.

3ல் ராகு இருந்தால் என்ன பலன்?

👉 தாராளமான மனதை உடையவர்கள்.

👉 கையில் தனம் தங்காது.

👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

👉 மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

👉 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 தன்னை பற்றி உயர்வாக எண்ணக்கூடியவர்கள்.

👉 அலங்கார பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

👉 எதிலும், எப்போதும் திருப்தி அடையாதவர்கள்.

👉 வெளியூர் நபர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

👉 மனதிற்கு பிடித்தவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

👉 தொழில்நுட்ப துறைகளில் ஆர்வம் உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக