Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 1 ஜூலை, 2020

ஆடுகளுக்கு பரவும் கொரோனா.... கர்நாடகாவில் தனிமை படுத்தபட்ட 50 ஆடுகள்..!

மேய்ப்பானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், 50-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன..!

கர்நாடகாவின் தும்கூர் (Tumakuru) மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 50 ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆடு மேய்ப்பவருக்கு கொரோனாா இருப்பது உறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

பின்னர் கிராம மக்கள் கர்நாடக சட்டம் மற்றும் தும்கூர் மாவட்ட பொறுப்பான அமைச்சராக இருக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே சி மதுசாமி மற்றும் மாவட்ட துணை ஆணையர் கே.ரகேஷ்குமார் ஆகியோரின் உதவியை நாடி விசாரித்தனர். இது குறித்து துறை அதிகாரிகள் கிராமத்திற்கு விரைந்து சென்று மாதிரிகள் சேகரித்ததைத் தொடர்ந்து இது குறித்து விசாரிக்குமாறு கால்நடை வளர்ப்பு துறைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

விலங்குகள் ஆடு பிளேக் என்றும் அழைக்கப்படும் பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ் (PPR) மற்றும் மைக்கோபிளாஸ்மா நோய்த்தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். விலங்குகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள விலங்கு சுகாதார மற்றும் கால்நடை உயிரியல் நிறுவனம் மற்றும் கால்நடை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, கோவிட் -19 இன் பாதிப்பு ஆடுகளுக்கு ஏற்படும் என பதிவு செய்யப்படவில்லை. PPR மற்றும் மைக்கோபிளாஸ்மாவும் தொற்றுநோய்கள் மற்றும் பிற விலங்குகளுக்கும் பரவக்கூடும் என்பதால் விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக