நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று
(Coronavirus) நிலைமை மற்றும் வெள்ள பாதிப்பைக் (Flood) கருத்தில் கொண்டு இந்திய
தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ) இந்த ஆண்டு செப்டம்பர் 7 வரை எட்டு தொகுதிகளின்
இடைத்தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது. நாட்டில் நிலைமை சரியானவுடன் தேர்தல்கள்
நடத்தப்படும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல் (BY-Eletions) தள்ளி
வைக்கப்ப எட்டு தொகுதிகள் பின்வருமாறு: பீகார் (1 வால்மீகி நகர்), அசாம் (108,
சிப்சாகர் ஏசி), தமிழ்நாடு (10-திருவோட்டியூர், ஏசி மற்றும் 46, குடியாத்தம் (SC)
ஏசி), மத்தியப் பிரதேசம் (166, அகர், (SC) ஏசி), உத்தரபிரதேசம் (65, புலந்தஹர்
ஏ.சி மற்றும் 95, டண்ட்லா ஏ.சி), கேரளா (117, சவரா ஏ.சி).
தேர்தல் விதிப்படி, காலியான
தொகுதிகளில் அதே நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் மூலம் காலியிடங்கள்
நிரப்பப்பட வேண்டும். ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு
தேர்தல் நடத்த கால அவகாசம் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில்
நடத்தப்படும்.
"COVID-19
இன் நிலைமை நாட்டின் பல பகுதிகளில் இன்னும் சீராகவில்லை. இந்த சூழ்நிலையில்
தேர்தல்களை நடத்துவது குடிமக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் பெரும்
ஆபத்தை ஏற்படுத்தும்" என்று ECI வட்டாரம் தெரிவித்தது.
மேலும், சில மாநிலங்கள் மற்றும்
மாவட்டங்கள் வெள்ளப்பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால்
"இந்த காலகட்டத்தில் மாவட்ட நிர்வாகம் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் மீட்பு
பணிகளில் ஈடுபடும். அந்த நேரத்தில் தேர்தல் வைத்தால் தேர்தல் நடவடிக்கைகளை
பாதிக்கும்" என்று ECI வட்டாரம் மேலும் கூறியுள்ளது.
அதிக மழை மற்றும் வெள்ளத்தைத்
தொடர்ந்து அசாம் மற்றும் பீகாரில் நிலைமை மோசமடைந்துள்ளது. மேலும் நாளுக்கு நாள்
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக