அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக உலகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறது. இதன்மூலம் அந்நிறுவனம், இதுவரை 25.20 விழுக்காடு பங்குகளை விற்று, 1,18,318 கோடி ரூபாய் நிதி திரட்டியது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஜியோ நிறுவனத்தில் 0.15% பங்குகளை வாங்கியது.
குவால்காம் நிறுவனத்தின் ஸ்நாப்ட்ரேகன் சிப்களை பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்நிறுவனம், தனது புதிய சிப்பான 865 X55 5G சிப்-ஐ சில தினங்களுக்கு முன் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக