ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகளின் ஊதியத்தில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நரேந்திர மோடி (PM Modi) தலைமையிலான மத்திய அரசு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ஊதியங்கள் சட்ட மசோதா 2019-ஐ (The Code on Wages Bill, 2019 ) அமல்படுத்த வாய்ப்புள்ளது. ஜூலை 7 ஆம் தேதி மத்திய தொழிலாளர் அமைச்சகம் (Union Ministry of Labour) வெளியிட்ட வரைவு தொழிலாளர் விதிகள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கேஜெட்டில் (Gazette) உள்ளன.
இது 45 நாட்களுக்கு பொது கருத்துக்காக திறந்திருக்கும், இந்த சட்டத்தில் எந்த சிக்கலும் இல்லாவிட்டால் அது செயல்படுத்தப்படும். இந்த குறியீடு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய ஊதியங்கள் சட்ட மசோதா மூலம் சுமார் 50 மில்லியன் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதியங்கள் சட்ட மசோதா 2019 (The Code on Wages Bill, 2019) ஊதியம், போனஸ் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை உள்ளடக்கியதாக திருத்தப்பட்டது. இந்த சட்டத்தில் மொத்தம் நான்கு வகையான சட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதாவது குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம், சம ஊதிய சட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
ஊதியக் குறியீடு வரைவு விதிகளின் முக்கிய கூறுகள்
இந்த மசோதாவில் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் உத்தரவாதம் அளிக்கிறார்கள். துறை மற்றும் சம்பள வரம்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவது சட்ட மசோதாவில் அடங்கும். ஊதிய தாமதம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே இதன் முக்கிய யோசனையாகும். ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகளின் ஊதியத்தில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
எளிய வரையறை:
ஊதியங்கள் சட்ட மசோதாவில் உழைப்பின மக்களின் வரையறையை பெரிதும் எளிதாக்கியுள்ளது. தொழிலாளர்களின் உரிமையாக்கப்படும். இது ஊதியம் பெறுவதில் ஏற்படும் தாமதம் தொடர்பான பிரச்னைகளை குறைக்க வழிவகுக்கும் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் பலனடைய தற்போதைய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேலை நேரம்:
சட்ட மசோதா வரைவு விதிகளின்படி, ஊதியக் குறியீட்டிற்குள் ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலை கட்டாயமாக இருக்கும். மேலும், இந்த 8 மணி நேர வேலைகளில் மாற்றங்கள் செய்ய தொழிற்சாலை சட்டத்தின் கீழ் எந்த திட்டமும் செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் வெடிப்பின் தாக்கத்தால் பொருளாதாரத்தின் மீது நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் மொத்த வேலை நேரத்தை அதிகரிக்கக்கூடும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக