
சூப்பர் ஹீரோ திட்டத்தின் மூலம்
வழங்கப்படும் தள்ளுபடியை பாரதி ஏர்டெல் நிறுவனம் சத்தமில்லாமல் குறைத்துள்ளது.
இந்த திட்டம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சக வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட்
கணக்குகளை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் இவர்களுக்குத் தள்ளுபடி
வழங்கப்பட்டு வருகிறது.
ஏர்டெல்
சூப்பர் ஹீரோ திட்டம்
இந்த திட்டத்தின் படி, ஏர்டெல் பயனர்
சூப்பர் ஹீரோ திட்டத்தைப் பயன்படுத்தி மற்ற வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட்
கணக்குகளை ரீசார்ஜ் செய்யும்போது நான்கு சதவீத தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.
இந்த சூப்பர் ஹீரோ திட்டம் கொரோனா தோற்று காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட
போது அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், நிறுவனம் முன்பு வழங்கிவந்த
சலுகையிலிருந்து இப்போது இரண்டு சதவீதமாகக் குறைத்துள்ளது.
நான்கு
சதவீத தள்ளுபடியை குறைத்த ஏர்டெல்
தள்ளுபடி அடிப்படையில் ஒரு எளிய
வழியில் இந்த திட்டம் செயல்படுகிறது. பயனர்கள் மற்ற ஏர்டெல் வாடிக்கையாளர்களின்
ப்ரீபெய்ட் கணக்குகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும், மேலும், அவர்கள் தங்களுக்கு
ரீசார்ஜ் செய்யும்போது நான்கு சதவீத தள்ளுபடியைப் பெறுவார்கள். ஏர்டெல் நிறுவனம்
ரூ .99, ரூ .129 மற்றும் அதற்கு மேற்பட்ட திட்டங்களுக்கு இந்த தள்ளுபடியை நிறுவனம்
வழங்குவதாக ஒன்லி டெக் தெரிவித்துள்ளது.
ரூ
.99 மற்றும் ரூ .129 திட்ட சலுகை
சூப்பர் ஹீரோ திட்டத்தின் மூலம், ரூ
.99 மற்றும் ரூ .129 திட்டத்தை இப்பொழுது ரீசார்ஜ் செய்யும் பொழுது அந்த பயனருக்கு
ரூ .2 மற்றும் ரூ 3 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், இதற்கு முன்பு
பயனர்கள் இந்த ரீசார்ஜ் தொகையை ரீசார்ஜ் செய்யும்பொழுது முறையே ரூ .4 மற்றும் ரூ
.5 கூப்பன்களைப் பெற்று வந்தனர்.
இலவசமாக
1 ஜிபி டேட்டா
மேலும், ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக் ரூ .45
மற்றும் ரூ .49 ஆகியவையும் முன்பு வழங்கப்பட்ட 4 சதவீத தள்ளுபடியிலிருந்து
குறைந்து வெறும் 2 சதவீத தள்ளுபடியுடன் மட்டுமே வருகின்றது. இதற்கிடையில்,
நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்களுக்கு இலவசமாக 1 ஜிபி தரவையும்
வழங்குகிறது.
பாரதி
ஏர்டெல் அனுப்பும் மெசேஜ்
இது ரிலையன்ஸ் ஜியோவின் சலுகையைப்
போன்றது, ஜியோ நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் 2 ஜிபி
தினசரி தரவை இலவசமாக வழங்கி வந்தது. இந்தியா முழுவதும் பயனர்களைத்
தேர்ந்தெடுப்பதற்காக புதிய சலுகை தோராயமாக வெளிவருகிறது மற்றும் பாரதி ஏர்டெல் ஒரு
குறுஞ்செய்தி மூலம் இதை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது.
இனி
இந்த திட்டம் கிடையாது
சமீபத்தில், ஏர்டெல் தனது ரூ .2398
நீண்ட கால திட்டத்தையும் சத்தமில்லாமல் நிறுத்தியது. ஏர்டெல் வலைத்தளத்திலும்,
மற்ற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் தளங்களிலும் இந்த நீண்ட கால திட்டம் இனி
கிடைக்காது. இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு
மற்றும் 100 எஸ்எம்எஸ் நன்மையை 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன்
வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக