Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 16 ஜூலை, 2020

மீண்டும் ஹீரோவாக ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறாரா வைகைப் புயல்.!


வடிவேலு அவர்கள் எலி என்ற திரைப்படத்தை அடுத்து சுராஜ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார்.

அதனையடுத்து 24ம் புலிகேசி படத்தின் பிரச்சினைகள் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிம்புவிற்கு வில்லனாக வடிவேலு அவர்கள் நடிப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனையடுத்து கமல்ஹாசனின் 'தலைவன் இருக்கின்றான்' படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், எலி, தெனாலிராமன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரசிகர்களை சிரிக்க வைக்க ரெடியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் கடைசியாக கத்தி சண்டை என்ற படத்தின் மூலம் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இதனை குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை, விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!