Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஜூலை, 2020

குடலை சுத்தமாக்க உதவும் சில ஆரோக்கிய குறிப்புகள்...!!

Bowel cleansing
ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் ஒரு நாளைக்கு 2 தடவை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகி புற்றுநோய் வராமல் தடுக்கும்.

நம் குடலை சுத்தம் செய்ய திரிபலா சூரணத்தை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து வர குடல் பிரச்சனைகள் சரியாகும். 

கடல் உப்பு குடலை சுத்தம் செய்வதிலும், மலம் கழித்தலை சுலபமாக்கும். நச்சுக்கள், பாக்டீரியா மற்றும் பாரசைட்ஸ் போன்ற கிருமிகளை அழித்து குடலை  சுத்தமாக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்கவைத்து வெதுவெதுப்பாக குடித்து வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ்  செய்ய வேண்டும். குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.

ஆவாரம் பூ மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றன. இதை கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி  குடித்தால் குடல் சுத்தமாகும்.

குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்ற 1/2 டேபிள் ஸ்பூன் மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து குடித்து  வந்தால் குடல் சுத்தமாக ஆரம்பித்து விடும்.

அவகேடா என்ற வெண்ணெய் பழம் நார்ச்சத்துகள் உள்ளன. இது தண்ணீரை உறிஞ்சி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.

கீரை, முளைகட்டிய பருப்பு வகைகள், ஆலிவ்ஸ், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ், செலரி, கடல் காய்கறிகள், கொலரார்ட் கீரைகள், லீக்ஸ், பட்டாணி, மற்றும்  சுவிஸ் சார்ட் போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது உங்க குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக