சாம்சங்
நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக
இந்நிறுவனம் அறமுகம் செய்யும் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது
என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் இந்நிறுவனம் இந்தோனேசியாவில் கேலக்ஸி ஏ01 கோர்
ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை கம்மி விலையில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக
இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்
வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்சமயம்
சிவப்பு,
நீலம், கருப்பு நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த
சாதனத்தின் முழுவிவரங்களைப் பார்ப்போம்.
சாம்சங்
கேலக்ஸி ஏ01 கோர் ஆனது 5.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 720 x 1480 பிக்சல் திர்மானம் மற்றும் 18.5:9 என்ற திரைவிகிதம்
அடிப்படையில் வெளிவந்துன்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறத்தில் ரிட்ஜ்
போன்ற வடிவத்துடன் பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
சாம்சங்
கேலக்ஸி ஏ01 கோர் சாதனம் மீடியாடெக் எம்டி6739 குவாட்-கோர் எஸ்ஒசி உடன்
1.5ஜிகாஹெர்ட்ஸ் மென்பொருள் வசதியை கொண்டுள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு (கோ எடிஷன்)
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த
கேலக்ஸி ஏ01 கோர் சாதனத்தில் 1ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான
சாம்சங் மாடல் வெளிவந்துள்ளது.
சாம்சங்
கேலக்ஸி ஏ01 கோர் சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா வசதி
இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.
பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
சாம்சங்
கேலக்ஸி ஏ01 கோர் சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே
சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இது இது 17 மணிநேர 4 ஜி டாக்டைம், 14
மணிநேர எல்டிஇ அல்லது வைஃபை இணைய பயன்பாடு, 11 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 70
மணிநேர வீடியோ பிளேபேக் வரை ஆதரவு கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்
ஸ்லாட், வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி 2.0, 3.5 மிமீ
ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும்
இந்த சாதனத்தின் விலை IDR 1,099,000 (ரூ.5,500)-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக