தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் இனி வாட்ஸ்அப், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் ட்விட்டர் போன்றசாட் ஆப்களிலிருந்து கூகுள் போட்டோஸ்-க்கு இனிமேல் மீடியா கோப்புகளை காப்புப் பிரதி எடுக்கப்போவதில்லை (அதாவது பேக்கப் எடுக்கப்போவதில்லை) என்று அறிவித்துள்ளது.
கூகுள் இந்த மாத தொடக்கத்தில் இந்த மாற்றத்தை சோதித்து வந்தது, இப்போது அதை அனைத்து கூகுள் போட்டோஸ் பயனர்களுக்கும் கொண்டு வந்துள்ளது.மெசேஜ் அனுப்பும் பயன்பாடுகளிலிருந்து மீடியா உள்ளடக்கத்தை காப்புப் பிரதி எடுக்காது என்பதை உறுதிசெய்ய கூகுள் நிறுவனம் அதன் கூகுள் போட்டோஸ்-இல் டீபால்ட் செட்டிங்ஸ்-களை மட்டுமே மாற்றுகிறது.
முன்னதாக, உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட எல்லா புகைப்படங்களையும் வீடியோக்களையும் கூகுள் போட்டோஸ் இயல்பாகவே காப்புப் பிரதி எடுக்கும். ஸ்மார்ட்போனின் கேமரா மூலம் படமாக்கப்பட்ட படங்கள் மற்றும் இணையத்திலிருந்து சேமிக்கப்பட்ட படங்கள் மற்றும் பல்வேறு சாட் மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளின் புகைப்படங்களும் இதில் அடங்கும்.
இப்படியாக புகைப்படங்கள் தானாகவே பதிவேற்றுவதை நிறுத்த பயனர் இந்த அம்சத்தை கைமுறையாக ஆப் செய்ய வேண்டியிருந்தது. இந்த புதிய நடவடிக்கை எந்தெந்த ஆப்களில் நடைமுறைக்கு வரும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் அதில் வாட்ஸ்அப், மெசஞ்சர், கிக், ஸ்னாப்சாட், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் லைன் ஆகியவைகள் இடம்பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக