Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஜூலை, 2020

அமெரிக்கர்கள் எங்களுக்கு உத்தரவு போட முடியாது: இந்தியா அதிரடி!

ஈரான் அதிபர் ஹாசன் ரவுகானியுடன் பிரதமர் மோடி

ஈரான் விவகாரத்தில் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு உத்தரவு போட முடியாது என்று இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

ஈரானுடன் தொடர்ந்து உறவை வலுப்படுத்தவும், முதலீடு செய்யவும் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானுக்கான இந்திய தூதர் கத்தாம் தர்மேந்திரா டெஹ்ரான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், ஈரானில் இந்தியா என்ன செய்ய வேண்டுமென அமெரிக்கர்கள் கட்டளையிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மேலும், மற்ற நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தடையையும் கடந்து ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு வலுப்படுத்தப்பட்டிருப்பது குறித்து கத்தாம் தர்மேந்திரா விவரித்தார்.

இதுகுறித்து அவர் டெஹ்ரான் டைம்ஸ் ஊடகத்துடன் பேசுகையில், “ரூபாய்-ரியால் வர்த்தக ஒப்பந்தத்தின்படி இன்னும் இந்தியா மட்டுமே வர்த்தகம் செய்துவருகிறது. இதன்படி நமது இருதரப்பு வர்த்தகத்திற்கு நிதி ஆதரவு அளிக்கப்படுகிறது. சபகாரில் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

சபாகார் துறைமுகத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்கி வருகிறோம். சபாகரில் என்ன செய்ய வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று அமெரிக்கர்களிடம் தெளிவாக தெரிவித்துவிட்டோம்” என்று கூறினார். அவர் பேசிய வீடியோ பகுதியை டெஹ்ரான் டைம்ஸ் ட்விட்டரில் பதிவிட்டு பின்னர் நீக்கிவிட்டது.

ரிசர்வ் வங்கியாலும், ஈரான் மத்திய வங்கியாலும் ரூபாய்-ரியால் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இரு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள் இந்திய ரூபாயிலும், ஈரான் ரியால் நாணயத்திலும் சரக்குகளை வர்த்தகம் செய்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக