விவோ
நிறுவனம் சீனாவில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த
ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைதது சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
விவோ
Y51s ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
பின்பு 1080 X 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும்
சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
விவோ
Y51s ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ்
880சிப்செட் உடன் மாலி-ஜி76 எம்பி3 ஜிபியு ஆதரவும் இடம்பெற்றுள்ளது. மேலும்
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +
2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
மற்றும்
பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
விவோ
Y51s ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக கருப்பு, வெள்ளை, நீலம் உள்ளிட்ட
நிறங்களில்
இந்த
சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை
இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
5
ஜி, டூயல் சிம் 4 ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், ப்ளூடூத் 5.0, டைப்-சி போர்ட்,
ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸமார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய
மதிப்பில்)ரூ.19,100-ஆக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக